பக்கம்:உயிரில் கலந்தது.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

93

"இவர் ஏகலைவன், கதை எழுதுவதில் இவர் அடியேனை பிரத்யட்ச குருவாக மதித்து வருகிறார்."

வாணி மெல்லிளஞ்சிரிப்பை வழிகாட்டி விட்டு, விழிகளை மூடி, மறுகி, வழி நடந்து நின்றாள்.

“இன்னொன்று. எனக்கு இரண்டாவது சிஷ்யையாக என் வாணிதான் அமரப்போகிறாள்!”

“அப்படியா? நல்லதுதான், ஸார்!"

அம்மா வந்து சமையல் விவரம் கேட்டாள். வாணியுடன் தனித்துப் பேசினாள். பிறகு வாணியும் அம்மாவும் அங்கிருந்து பிரிந்தார்கள்.

பிரிந்துகிடந்த ஒரு கடிதத்தைப் பார்த்தார் ஞானசீலன். தஞ்சையில் முகாமிட்டிருப்பதாகவும், விரைவில் தம்மைச் சந்திக்க ஆசை மிகக் கொண்டிருப்பதாயும் கடிதம் ஒன்று பேசியது. குரல் ஈந்த பெயர் 'குந்தவ்வை!’


18.ஆண்டவன்-யாரை?...

ஸ்ரீமான் கோதண்டபாணி வந்தார். வந்து, விவாக சுப முகூர்த்தப் பத்திரிகையின் பிரதி ஒன்றை எழுதிச்சென்றார், அவர் நொடிக்கு நூறு தரம், ‘என் அருமை மகள் வாணியின் கல்யாணம்தான் என் லட்சியம். அவள் திருமணம் முடிந்தால்தான் அவள் அன்னையின் ஆவி சாந்தி பெறும்.தன் பங்கிற்கும் உழைத்துச் சாப்பிட வேண்டும் என்ற தாத்பரியத்துடன் கடமையில் கண்ணாக இருப்பவள் வாணி. அவள் தோழி யாரோ வந்திருக்கிறாளாம், அவளோடுதான் நாலைந்து நாளாக நேரம் கழிக்கிறாள். மனச்சாட்சி, கடமை, நன்றி என்று உயிரைவிடும் இம்மாதிரிப் பெண்ணை இந்த நாகரீக அணுயுகத்தில் காண்பது ரொம்ப துர்லபம்!’ என்று