பக்கம்:உயிரில் கலந்தது.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106


திரட்சி மேட்டைக் கண்டார். புலனறிவு பொறி கலங்கியது அவருக்கு.

அவள் தலையையோ, விழியையோ உயர்த்தவில்லை. அவர்

மறுபடியும் பார்த்தார். அழகு, இன்னும் கூடுதலான அழகைக் காட்டியது.

மேனியில் ரோமாஞ்சலி கிளர்ந்தெழுந்தது. உடலெங்கும் கொதிப்புணர்வு படர்ந்தது. மனேவிகாரம் அவருள் சுழித்தது. *தவசீலி’ என்று அழைக்கப் பிரித்த உதடுகளிலே ‘வாணி!” என்ற பெயர் புறப்பட்டது.

தவசீலி துணுக்குற்றுத் திரும்பவேண்டியவள் ஆளுள்.

ஆவி தழுவி நின்ற புல்லரிப்பைத் தட்டிக்கழித்துவிட்ட பரதவிப்பில் மனம் கலங்கிக் காணப்பட்ட ஞானசீலனின் நெஞ்சம் இளக்கம் கண்டது.

‘தவசீலி, என்னிடம் சொல்ல வேண்டியதைப் பட்டவர்த் தனமாகச் சொல்வி விடுங்கள். சுற்றி வளைத்து நீங்கள் பேசினால், அதைப் புரிந்துகொள்ளக்கூடிய மனேநிலையில் நான் தற்சமயம் இல்லை: ஆமாம், தவசீலி!” என்று குரலில் அழுத்தம் பதித்து, அவ்வழுத்தத்தில் கண்டிப்பையும் ஏற்றித் தெரிவித் தார், ஞானசீலன்.

“ஆகட்டும் வார். இன்னும் கொஞ்ச நாழிகைப் பொழு துக்கு மட்டும் நீங்கள் இந்த அபலையின் நிமித்தம் கொஞ்சம் பொறுமையாக இருங்கள்! ஸ்ார். ஆசிரியர் லார்! நான் அைைதயாக இப்போது உங்கள் முன்னே குந்தியிருக்கிறேன். அருவமான ஆண்டவனே நான் இதுவரை கண்டதில்லை. ஆனால், இதோ, உருவமான வடிவத்துடன் என் ஆண்டவனே நான் தரிசித்துக் கொண்டிருக்கிறேன். அந்த ஆண்டவன் எனக்கு வைத்த சோதனைகளுக்கெல்லாம் விடிமோட்சம் காட்டப் போகிற இந்த ஆண்டவனத்தான் நான் இக்கணத்தில் முழுக்க முழுக்க நம்பியிருக்கிறேன். அதாவது, என் வாழ்வை பும் தாழ்வையும், என் உயிரையும், உடலையும் உங்களுடைய