பக்கம்:உயிரில் கலந்தது.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103


நாடி வத்திருக்கிறேன், அளுதையாக!,. ஆளுல் இனியும் என்னை அனுதையாக விடமாட்டார் என் ஆண்டவன்.” என்று உறுதியின் பக்கபலத்தோடு பேசிய அவள் நேரில் நின்று, நினைவில் ஊடுருவி, நெஞ்சில் பிரதிபலிப்பதை யூகித் தார். ‘என் நெஞ்சைத் திறந்து என்று தொடர்பற்ற நிலை யுடன் வார்த்தைகளை அடுக்கினர். கேளில் இருக்கும் எழுத் துக்களை வகைமாறி ஸ்டிக்கில் அடுக்கப் பிரயத்தனப் படுகிற புதிய கம்பாலிட்டர் போல. அடுக்கியதை வாசித்துப் பார்த்ததும் மெல்லிளஞ் சிரிப்பை தனக்குத்தானே கொட்டி வெட்கப் படுகிறது போன்றே அவரும் சிரித்து விட்டு அப்பால் வெட்கப்பட்டார். அந்தவெக்கம் நியாயமாக தவசீலியின் சார்பில் அல்லவா தோன்றியிருக்க வேண்டும்? வார்த்தைகள் தறிகெட்டுப் புறப்பட்டால், பொருள்களும் விபரீதமாகத் தானே ஒலிக்கின்றன! ஆமாம்: ஸ்னவோ, ஆண்டவன் அப்படி இப்படி என்றெல்லாம் இந்தக் குமரிப் பெண் ஏதோ பேச்சுக் குச் சொல்வத்ாக திணைக்கப் போக, இப்போது எதையோ ஒன்றை உள்ளடக்கிப் பேசுவது போலத் தோன்றுகின்றதே?”

  • * @rgy prrif ! ... **

‘தவசீலி!...”

‘ம்’ என்று ‘உம்’ கொட்டிவிட்டு, பிறகு, சந்தடி ஏதும் காணப்படுகிறதா என்று ஆராய்ந்து பார்த்தவாறு, சந்தடி எதையும் காணுததால் உண்டான அமைதியுடன் அவள் பேசலானுள்: “ஆசிரியர் லார்! உங்களுக்குக் காதலில் நம் .பிக்கை உண்டல்லவா?”

ஞானசீலன் அவளே இப்போது துணிவின் துணையுடன் ஊடுருவிப் பார்த்துவிட்டுச் சொன்னர்: “சொல்கிறேன். ஊதுவத்தி இருக்கிறது. பாருங்கள். அது தன்னை அழித்துக் கொண்டு பிறருக்கு மணம்தரும். ஆனால், காதலோ சம்பந்தப் பட்டவர்களே அழித்துவிட்டு அது உயர்ந்து நிற்கவல்லது!காதல் என்பது ஒரு பொய்விளையாட்டு. கண்டதும் காதல் முளைப்பது எழுத்துக்களில் மட்டுமே ஜீவனுடன் விளங்கும். நடைமுறை வாழ்க்கையில் காதல் என்று சொன்னல், அது அன்பு என்ற