பக்கம்:உயிரில் கலந்தது.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

s | 12

பூசிக்கத் தொடங்கி விட்ட அவள் அந்த ஒரு பக்திபுணர்வில் பாசத்தையும் அன்பையும் வளர்த்து வந்த கட்டத்தில்தான் இவள் உங்களைச் சந்திக்க விரும்பி, முன்னதாகத் தபாலும் போட்டிருக்கிருள்: பிறகு சந்தித்தும் இருக்கிருள். உங்களையே தன் ஆண்டவளுக வரித்துக் கொண்டிருந்த நியிேல்தான், இவளே நான் அறிந்தேன், வாழ்ந்துகெட்ட இவளது அப்பா வின் தபால்மூலம், அளுதைக்கு வாழ்வளித்த குடும்பப்பெண் அணுதையாகி வந்தாள். என் காதலை வெளியிட விழைந்த நேரத்தில், அவள் தன் இதயத்து ஆசையைக் கொட் விடவே, ‘உங்களே நான் அறிவேன்’ என்ற மட்டோடு நான் அவளிடம் சொல்வி நிறுத்திக் கொண்டேன். என்னை வளர்த்த குடும்பத்திற்கு நான் செய்யக்கூடிய-செய்தாக வேண்டிய கடமையை நான் நிறைவேற்றினுல்தான் எனக்கு நல்ல மூச்சு வரும். அப்போதுதான், ஆண்டவனும் என்னை மன்னிப்பான்; என் மனச்சாட்சியும் என்னை மன்னிக்கும். ஆகவே, என் வேண்டுகோளுக்கு இணங்கி, தவசீலியை நீங்கள் கைத் தலம் பற்றி வாழ விடுங்கள் எலார்! என் தியாகத்தை வாழ்த்தி என் நன்றிக்கடனை வாழ விடுங்கள், ஆசிரியர் ளார்:”

மேலும் ஏதோ சொல்ல வாயெடுப்பதைக் கண்ட ஞானசீலன் பொறுமையை இழந்தார். ‘வாணி, உன் பிர சங்கம் கேட்கத்தான் இனிக்கிறது. ஆனல், உன் இஷ்டத்துக் காக என் கனவுகளை குழிதோண்டிப் புதைக்க நான் ஒப்ப மாட்டேன். உன் காதலைத் தெரிந்துகொண்ட பிறகுகூட, விட்டுக் கொடுக்கும் பண்பு இல்லாத இந்தப் பெண்ணிடமா நான் வாழ்நாளெல்லாம் அகப்பட்டு விழிக்க வேண்டும்? ஊஹூம், ஒருகாலும் ஒப்பமாட்டேன். இந்தத் தவசீலியை மணப்பதென்பது பகற்கனவு’ என்று அழுத்தமாகச் சொன்ஞர்.

“அப்படிச் சொல்லாதீர்கள் ஸ்ார். என் நன்றிக் கடனை சிறைவேற்ற ஒரு சந்தர்ப்பத்தை உண்டாக்கி யிருக்கிறது தெய்வம். தவசீலி தங்கமான பெண். நான் வேண்டியிருந் தால், அவள் ஒதுங்காமல் இருக்கவே மாட்டாள். ஆனல்