பக்கம்:ஏலக்காய்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வரலாற்றுப் பெருமைக்குரிய ஏலம்!


பாரதம், பாருக்குள்ளே நல்ல நாடு; அது பழம்பெரும் நாடு. வரலாறு படைத்து, வரலாற்றில் வாழ்ந்து வரும் பாரதநாடு — இந்திய நாடு, எத்தனை எத்தனையோ ஆண்டுகளாக வாசனைத் திரவியங்களின் தாய்நாடாகவும் மரபு வழிச் சிறப்போடும் பண்பாட்டு முறைப் பெருமை யோடும் விளங்கி வருகிறது! — இது உலகம் அறிந்த நடப்பு!

உலகத்தின் அரங்கத்திலே விலைமதிப்பற்ற நவரத் தினக் கற்களுக்கு இருந்து வந்த மதிப்பும் மரியாதையும் இந்திய நறுமணப் பொருட்களுக்கு ஏற்படலாயிற்று.

இது வரலாற்றுச் சேதி! — இதில், இந்திய வாசனைத் திரவியப் பொருட்கள், ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மத்தியக்கிழக்கு நாடுகளிலே மணம் பரப்பத் தொடங்கிய விவரமும் அடங்கும்.


ரோமாபுரியில்

இந்தியாவின் நறுமண விளைபொருள்களுக்காகவே இந்தியாவோடு சர்வதேச வாணிகத்தை ஏற்படுத்தி நிலைப் படுத்திக் கொண்ட முதற்பெருமை கட்டாயம் அரேபியர் களைத்தான் சேரவேண்டும்! — அரபுக் கலாசாரத்தில் முதல் மரியாதை பெற்ற பெருமையும் இந்திய வாசனைத் திரவியங்களுக்கே உண்டு!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏலக்காய்.pdf/26&oldid=506007" இலிருந்து மீள்விக்கப்பட்டது