பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5

விதந்து பேசியுள்ளார். இத்தொடரே அப்பர் பெருமானே “வேண்டாமை வேண்டுவதும் இல்லான்” என்று இறைவனைப்பற்றிப் பாடச் செய்தது.

பார்க்குமிடமெங்கும் ஒரு நீக்கமற நிற்கும் இயல்பு இறைவனுக்குரியதாதலின், அதனை ஒரு சொல்லால் உணர்த்தவே “இறைவன்” என்று இனிது எடுத்துப் பேசினர் நாயனார். இறுத்தலாவது தங்குதல். இறைவன் எங்கும் தங்கி இருப்பவன். ஆகவே, அப்பொருள் தரும் சொல்லால் இறைவன் என்று கூறப்பட்டான். தான் எங்கும் தங்கி இருந்ததனால் அன்றோ, திருக்குறிப்புத் தொண்ட நாயனார் கல்லில் தம் தலையை மோதியபோது, அதனின்றும் கையைத் தோற்றுவித்து அவர்தம் தலை மொத்துண்ணாவாறு தடை செய்தான் இறைவன் !

நாம் ஐம்புலன்களைப் பெற்றிருக்கிறோம். அப்புலன்களை அடக்கி ஆளுதல் என்பது எளிதில் முடியும் செயலும் அன்று. ஆனால், இறைவனை நம்மாட்டு வைத்த அருள் காரணமாக நம்போன்று வடிவம் கொண்டாலும், அவ்வடிவத்தில் அமைந்த ஐம்புலன்கள் அவனை ஒன்றும் செய்ய மாட்டா. இறைவன் நம்பொருட்டே, அதாவது நாம் இறவாப் பேர்இன்பம் பெறவே, அருள் திருமேனி கொள்கின்றான் என்பதைச் சிவஞான சித்தியார் நமக்கு நன்கு எடுத்து மொழிகின்றது. ஆகவே, அவன் ஐம்புலன்களையும் பெற்ற வடிவினனாகக் காட்சியளித்தாலும், அவ்வைம்புலன்களையும் செற்ற அறிஞன் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை. ஐம்புலன்கள் ஆறத்துய்த்தற்குரியோர் போல அவனுக்கு மனைவி மக்கள் முதலியோர் இருப்பவராகக் கூறப்பட்டு வருகின்றதே எனில், இறைவனுக்கு அமைந்த மனைவி மானிடர்கட்கு அமைந்த