பக்கம்:ஏலக்காய்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

ஏலக்காயையும் காப்பித் தூளையும் சம அளவில் கலவை செய்து தயாரிக்கப்படும் 'காவா’ என்னும் ஏலக்காய்க் காப்பி அரபு மக்களின் சமூக அந்தஸ்தை மேன்மைப்படுத்தும், பிரியாணி, புலவு வகைத் தயாரிப்புக்களிலும் ஏலம் மனக்கும்.

ஹாலந்து நாட்டினர் வேகவைத்த மாப்பண்டங்கள், மிட்டாய், இறைச்சி போன்றவற்றிற்கு ஏலக்காயின் துணையை நாடுவர்!

ஸ்காண்டிநேவிய மக்களுக்கு பணியாரங்கள் போன்ற தின்பண்டங்களுக்கும் ஜெர்மானியர்கட்குக் கட்டுமானம் செய்யப்பட்டுப் பதனம் செய்யப்படும் உணவுப் பதார்த்தங்களுக்கும் ஏலம் பயன்தருவது சகஜம்.

ஜப்பான் நாட்டில் கறிபவுடர், மதுபானம், மருந்து, பற்பசை போன்றவற்றில் ஏலக்காய் சேர்க்கப்படுகிறது.

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சோவியத் ருஷ்ய நாடுகளில் இறைச்சித் தயாரிப்புக்களில் ஏலக்காய் சிறப்புடன் கூட்டுக்கலவை செய்யப்பட்டு வருவதும் உண்மை நடப்புதான்!

சிறிய ஏலக்காயைப் போலவே பெரிய ஏலக்காயும் ஆயுர்வேத மருத்துவ முறையில் உபயோகிக்கப்படுவது உண்டு. பெரிய ஏலக்காய் மூலம் நடைபெறும் உற்பத்தி அளவு 2100 மெட்ரிக் டன்னாகவும், பெரிய ஏலக்காய் ஏற்றுமதி மூலம் இந்திய நாட்டுக்குக் கிட்டும் தேசிய வருவாய் சுமார் ரூ 50 லட்சமாகவும் அமையும்!

சிறிய ரக இந்திய ஏலக்காயை மேலும் அதிக அளவில் உற்பத்தி செய்யவும் ஏற்றுமதி செய்யவும் ஏலக்காய் வாரியம் திட்டமிட்டுள்ளது. ஏலத் தோட்ட விவசாய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏலக்காய்.pdf/67&oldid=505977" இலிருந்து மீள்விக்கப்பட்டது