பக்கம்:ஏலக்காய்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53

அழுகல் நோய்க்கும் 'போர்டோ' மருந்துக்கலவை கண் கண்ட - கைகண்ட தடுப்பு மருந்தாக விளங்கும்; நோயும் கட்டுப்படும். மே - ஜூன் காலப்பிரிவில் தென்மேற்குப் பருவக்காற்று தொடங்கியவுடன், களைஎடுத்தல் மற்றும் 'கவாத்து எடுத்தல்" எனப்படும் துப்புரவுப் பணிகள் நடந்து முடிந்த பிறகு, செடித்தொகுதிகளைச் சுற்றி போர்டோ கலவை மருந்தை ஊற்றி ஊறவைப்பது உபயோகமான நடைமுறைச் செயற்பணியாகவே அமையலாம். மழை நின்று, ஆகஸ்ட் ஆரம்பத்தில் இரண்டாம் தரமாக மருந்து தெளித்தும் நோய் கட்டுக்குள் அடங்காமல் திமிறினால், செப்டம்பர் கெடுவில் மூன்றாம் முறையாகவும் மேற்படி மருந்துக் கலவையின் உதவியை நாடுவதில் தவறு ஏதும் இல்லைதான்!

அப்பால், செடித்தொகுதி அழுகல் மற்றும் அடிநில வேர்த்தண்டு அழுகல் நோய்கள்கூட, பூஞ்சண நோயைச் சார்ந்தவைதான்; சேர்ந்தவைதாம்! இந்நோய்களுக்கு முகம் பார்க்கும் கண்ணாடியாக இலைகளே விளங்கும், அவை வெளுத்து, ரத்தச்சோகை பிடித்த பாங்கிலே மஞ்சள் பூத்துவிடும். இலைகள் உதிர்ந்தபின், செடிகளின் அடித்தளம், வேர்த்தண்டோடு இணைந்த முனைப்பாகம் எல்லாமே நோயின் ஆக்கிரமிப்புக் காரணமாகச் சோர்ந்து, வலுவிழந்து போய்விடுகின்றன.

நாற்றங்காலிலுள்ள பாத்திகளில் 1% அளவில் 'போர்டோ' கலவை தெளிக்கப்படல் வேண்டும். வயலிலுள்ள செடித் தொகுதிகளில் எரியகக்காடி உப்பு வகைகளோடு சுண்ணாம்பையும் கலந்து பயன்படுத்தலாம்!


செந்தாள் நோய்

அடுத்ததான 'செந்தாள் நோய்' கூட, செடி இலைகளில்தான் முதலில் முற்றுகை செய்யும். இங்கேயும், நைவுப்புண்கள்தான் குறியீடு, பாக்டீரியா என்று சொல்லப்படும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏலக்காய்.pdf/56&oldid=505965" இலிருந்து மீள்விக்கப்பட்டது