பக்கம்:அமுதவல்லி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறுமுகம் 49 __________________________________ என்று பூடகமாகப் பேச்சைத் தொடங்கி, பின், அவர் வழக்கமாகப் பருகும் , பிளாக் நைட்” மதுவின் பெயரையும் தெரிவித்தார்.

   சுப்பையாவுக்கோ ஆத்திரம் சூடு பிறந்தது "உங்க கம்பெனியிலே இரு நூற்றைம்பது ரூபாய் கொடுத்து என்னை மானேஜராக நியமிச்சது உங்க கம்பெனியோட நிர்வாகத்தைக் கவனிக்கிறதுக்குத் தானே? இம் மாதிரியான ஈனச் செயல்களுக்கு பத்து இருபது கொடுத்து யாராவது ஈனப்புத்திக்காரனை எடுபிடியாக வச்சுக்கிடுங்க. ஆற்றிலே போட்டாலும் அளந்து போடணும்னு உங்க இனத்திலே சொல்லப்படுகிற வழக்கை நானும் அறிஞ்சவன் என்கிறதாலே தான் சொல்கிறேன். இதுநாள் பரியந்தம் என்னைச் சோதிக்காமல் இருந்த உங்க நல்ல புத்திக்குக் கும்பிடு போடணும் !” என்று சோளம் பொரியச் சொல்வி விட்டு, அத்துடன் நிற்காமல், தனக்குச் சேர. வேண்டிய சம்பளப் பாக்கியையும் வாங்கிக் கொண்டு அதற்கப்புறம் ஒரு கணமும் அங்கே நிற்காமல், மாநம் புச்சாவடி வீட்டுக்கு வந்து விட்டான்.
   புயலின் காதை புரிந்தது மீனாட்சிக்கு. “பணம் ஒசத்தியில்லேங்க. நீங்க செஞ்சது தான் சரி. நமக்கு - நம்ப மாதிரி ஏழை பாழைங்களுக்கு இருக்கக்கூடிய விலை மதிக்க முடியாத செல்வம் நம்ப மானமும் கெளரவமும் தானுங்களே, அத்தான்!” என்று தேற்றினாள்.

அங்கேயே வேறிடத்தில் வேலை தேடிக் கொள்ள முயற்சி செய்தான் சுப்பையா. அப்போதுதான் அவனுக்கு விஷ ஜூரம் மூண்டு, பாயும் படுக்கையுமாகி, மீனாட்சியின் நகை நட்டுகளும் மிச்சம் மீத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/51&oldid=1378210" இலிருந்து மீள்விக்கப்பட்டது