பக்கம்:ஈட்டி முனை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



6

காமம் இருக்கிறது. பெண் அங்க வர்ணனைகள், லீலா விநோதங்கள், அடுப்பங்கரை அந்தப் புர அதிசயங்கள், எல்லாம் உண்டு. கடவுளரின் லிலைகள் 'புதுடிசைனில்' வருவதுண்டு. அகல்யை கதை அபிநவ புராணமாய் ஐம்பதாவது தடவையாக அளக்கப்படுவது உண்டு. முனிகள் கதை உண்டு. ராமபஜனையும் உண்டு.

இவற்றால் பயன் ஏதும் உண்டா? சிந்திக்கும் வாசகன் கேட்கின்றான் இன்று. இதையே தான் கேட்டார் நமது கவிஞர் அன்று:

கடவுள் துவக்கிக் கொடுத்த - பல
கவிதைகள், பதிகங்கள் செப்பிய பேர்கள்
கடவுள் புவிக் கவதாரம் - அந்தக்
... ... ... ... ... ...
கதைகளினாலும் சுகங்கண்ட துண்டா?

அடிமை தவிர்ந்ததும் உண்டோ? - அன்றி
ஆதிமுதல் இந்தத் தேதி வரைக்கும்
மிடிமை தவிர்ந்ததும் உண்டோ? - அன்றி
மேல்நிலை என்பதைக் கண்டதும் உண்டோ?
துடிக்கவும் நீரற்றிருக்கும் - ஏழைக்
கூட்டத்தை எண்ணாடில், கொடுந்தடியர்க்கு
மடங்கட்டி வைத்ததினாலே- தம்பி !
வசம் கெட்டுப் போனது நாம் நாடு.

அவ்வளவு தானா? அந்தகாரத்தை விதைக்கின்ற மதவாதிகளையும் மடத்தார்களையும் போலவே எழுத்தாளர்களும் அறிவுக்கு இருட்டடிப்பு போட்டு வந்திருக்கிறார்கள். இன்னும் போட விரும்புகிறவர்கள் பெரும்பாலோர், அவர்கள் இலக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈட்டி_முனை.pdf/8&oldid=1295851" இலிருந்து மீள்விக்கப்பட்டது