பக்கம்:அமுதவல்லி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறு முகம்

மீனாட்சி அவசரம் அவசரமாக ஐந்தறைப்பெட்டியை எடுத்து வெளிச்சத்தில் வைத்துத் திறந் தாள். ஏதாவது காசு பணம் ஒளிந்திருக்க வேண்டுமே என்று மாரியம்மனை நேந்து கொண்டது அவளது பெற்ற நெஞ்சம் கடுகுக்கடியில் இரண்டு ஐந்து காசுகளும் வெந்தயஅறையில் ஒரு பத்துக்காசும் கிடைத்தன. எடுத்துப் போட்டாள்.

சுப்பையா தன்னுடைய கிழிசல் பர்ஸைத் துழாவியபோது சில்லறைக் காசுகள் பதினைந்து காசுக்குத் தேறின.

எல்லாவற்றையும் வாய்விட்டு எண்ணத் தொடங்கினான் காமராஜ். கூட்டல் கணக்கில் அவன் சூரப்புலியாக்கும்! பலே! இன்னமும் பதினைஞ்சு காசு தான் வேணும்!” என்று முத்துப்பல் வரிசையை அம்பலப் படுத்திய வண்ணம் நடைக்கு ஓடினான்; பழைய அட்டைப் பெட்டியை எடுத்துப் பிரித்துக் கொட்டினான். சிதறிய கோவிக் குண்டுகளுக்கும் சினிமா நோட்டீஸ்களுக்கும் ஊடாக மூன்று காசுகளும் விழுந்தன. எப்போதாவது வாய் இளைத்து” வரும் வேளைகளிலே அம்மாவிடமோ அல்லது அப்பா விடமோ காசு வாங்கி ஏதாகிலும் வாங்கித்தின்டான் அவன், சில சமயங்களிலே, பொறுப்புக் கொண்டவனாக அந்தக் காசுகளைப் பத்திரமாகச் சேமித்து வைப்பதும் உண்டு. அவ்வகையில் மிஞ்சியவைதாம் இக்காசுகள்! எண்ணினான் பதினாறு காசுகள் சேர்ந் திருந்தன. சபாஷ் என்று கூவிய வாறு, ஒரு காசை மீண்டும் அந்தப் பழைய அட்டைப் பெட்டியில் போட்டுவிட்டு, பதினைந்து காசுகளை எடுத்துக் கொண்டான்; காத்திருந்த முப்பத்தைந்து காசுகளுடன் இணைத்தான். எல்லாவற்றையும் இனம்பிரித்து, திரும்பவும் எண்ணினான். “வள்ளிசாக அம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/45&oldid=1375386" இலிருந்து மீள்விக்கப்பட்டது