பக்கம்:அமுதவல்லி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24 அமுதவல்லி

தொலைபேசிக் கருவியின் பாதத்தடியில் இருப்புக்கொண்டான் சோமலிங்கம். அன்றைக்கு பங்களாவில்தான் சாப்பாடு. சாப்பிட்டு முடிந்தவுடன், சட்டைப்பையைத் துழாவிய நேரத்தில், தோட்டக்காரன் ஓடிவந்து ஒரு பொருளைக் கொடுத்தான். அது மீசை-மீசையிலும் பாதி மீசை! "எவனாச்சும் வேஷம் கட்டுகிறவனுக்குக் கொண்டு போய்க் கொடுக்கிறதை விட்டுப்புட்டு, ஏண்டா எங்கையிலே இந்த ஒட்டு மீசையை வேறே வச்சுப் பயமுறுத்துறே? ..உள்ள மீசைக்கே தேவைப்படுற் தைரியத்தைக் காணோமாம்! போடா, போ!’ என்று "டயலாக் பேசி முடித்ததும், நிற்காமல் நிதானிக்காமல் அவன் உறங்க முனைந்தான்.

பாதிச் சாமம் இருக்கும்...!

"தடதட'வென்று யாரோ கதவை இடித்தார்கள்.

சோமலிங்கத்தை எழுப்பிய பெருமையை அந்த ‘இராஜபாளையத்துக்குத் தான் கொடுக்கவேண்டும். அலறிப் புடைத்தவனாக எழுந்துபோய்க் கதவு திறக்கும் கட்டங்கள் மூன்றைக் கடந்தபோது, வாசலில் கார் மட்டும் காணப்படவில்லை; ஒர் அதிசயமும், சேர்ந்து தரிசனம் தந்தது.

திரை நடிகர் இந்திரஜித் ரத்தக் கோடுகள் நிறக்கக் காட்சியளித்தார். கிலி அடித்துப் போட்டிருக்க நியாயமில்லை. புலி அடித்துப் போட்டிருக்குமோ?...

அடுத்த வினாடி, "மானேஜர் ஐயா!’ என்று ஒரு குரல் கேட்டது. அமுதவல்லி தோன்றினாள். நெற்றி மேட்டில் கட்டுப் போடப்பட்டிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/26&oldid=1214847" இலிருந்து மீள்விக்கப்பட்டது