பக்கம்:ஈட்டி முனை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25

35 இலக்கியம் சக்தி வாய்ந்தது. நாகரிகத்தின் ஜீவன் அது. கலாசாரத்தின் உயிர்ப்பு. மனித உயர்வின் சின்னம் அது, உயர்வுக்கு வழிகாட்டும் பாதை அது. இலக்கியம் மொழியின் மூச்சு. உயிர் களின் சக்தி. ஒளி அது. வாழ்க்கைக்கு அத்தியா வசியமான மந்திரம் அது. வாள் கொண்டு பகைமைக் களை யை அறுத் தெறியலாம். துஷ்டப்பிராணிகளை ஒழிக்கலாம். தற்கொலையும் செய்து கொள்ளலாம்! இலக்கியம் ஒரு வாள், வலிவுள்ள கருவி. அது அமுதம். அதே நச்சாகவும் மாறும். வாள் பயனுள்ள ஆயுதமாவதும் தற்கொலைக் கருவியாவதும் பற்றியுள்ளவன் கைவன்மையை, மனோ வலிமையைப் பொறுத்தது. இலக்கியம் அமுதமாவதும் நஞ்சாக மாறுவதும் பேனாப் பிடிக்கிறவர்களின் மனோ பலத்தை, நம் பிக்கையை, திறமையைப் பொறுத்தது. இன்றைய எழுத்தாளர்களில் பெரும்பாலோர் அமுதத்தை நச்சாக மாற்றும் திருப்பணியில் தான் ஈடுபட்டிருக்கிறார்கள். முழு நஞ்சு தயாரிக்கத் திறனற்றோர், அமுதத்தின் புனிதத்தைக் கெடுத்துக் கோளாறுபடுத்தும் புண்ணியவேலையை யாவது செய்து வருகிறார்கள். இலக்கியத்தின் மனிதப்பண்பை மறந்து விடு கிறார்கள். அல்லது ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள், அதே வேளையில் இலக்கியம்,தெய்வீகமானது என்று சொல்லி ஒருசிலரின் தனி அறைகளுக்குள்ளே பதுக்கி விட முன்வந்திருக்கிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈட்டி_முனை.pdf/27&oldid=1369058" இலிருந்து மீள்விக்கப்பட்டது