பக்கம்:ஈட்டி முனை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21

31 வது, மற்றவர்களையும் சிந்திக்கச் செய்வதன் மூலம் வாழவழிகண்டு, மனித உரிமைகளைப்பெற்று இன்ப வாழ்வை நிர்மாணிக்க முயல்வது. சகிப்புத் தன்மை யும் போராடும் சக்தியும், தன்னம்பிக்கையும், உயிர் வாழத் தெம்பும் ஊட்டுகிற வாழ்க்கை வழிகளைக் கூறுவது. அல்லது, திட்டமிடத் தூண்டுவது. ஒவ்வொருவனும் மனிதனே. மனிதரிடையே மனிதனாக வாழ எல்லோருக்கும் உரிமை உண்டு. அப்படி வாழ வேண்டும். நாம் வாழத் தான் பிறந் தோம். வாழ்வின் இழி தகைமைகளை ஒழிப்போம். வெல்வோம். வாழ்வோம் - இதற்கு உணர்வு ஊட்டி, உற்சாகம் அளித்து செயலுக்குத் தூண்டு வது இலக்கியம். அது கவிதை, கதை, கட்டுரை. நாடகம், நாவல் முதலிய எந்த உருவில் இருந்தால் என்ன? இந்த ஒளி மங்கிவிட்டது. உ யிர்க்கனல் அவிந்து கிடக்கிறது. வெறும் கூடுகளும் பொம்மை உருவங்களும், பிரேதங்களும் இலக்கியம் என்று பிரமாதப்படுத்தப்படுகின்றன. இவற்றை சிருஷ்டிப் பவர்கள் பரஸ்பரம் புகழ்ந்து கொண்டும் வசை பாடியும் திரிகிறார்கள், ஏதோ அற்புதங்களைச் சாதித்து விட்ட அபூர்வப் பிறவிகள் போல. அவர்கள் கற்க வேண்டியது எவ்வளவோ. சாதிக்க வேண்டியவை அளவில. முதலில், அவர்கள் தங்களைச் சுற்றிப் பின்னி யுள்ள பொம்மை வலையை, போலி படாடோபத் திரையை கிழித்தெறிய வேண்டும். தாங்க ளு ம் தொழிலாளர்களே என்று உணர்ந்து, சமுதாய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈட்டி_முனை.pdf/23&oldid=1369017" இலிருந்து மீள்விக்கப்பட்டது