பக்கம்:அமுதவல்லி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறுமுகம் 55


நீட்டினாள் கிழவி. "உங்க மரத்துப் புளி நல்ல காட்டமாய் இருக்கு மாக்கும்" என்றாள்.

   "தெய்வம் தெய்வமாவே இருக்குது" என்று அமைதி கொண்டாள் மீனாட்சி. உணவுப் பிரச்னை திர்ந்து விடும் இப்போதைக்கு என்ற உணர்வின் அமைதியே அவள் பசியைக் கூட மறக்க- மரக்கச் செப்தது. கிழவியை அனுப்பி விட்டு, கணவனை நெருங்கினாள். "இந்தாங்க, ஒரு ரூபாய் இருக்கு. நீங்க கோயில் கடையிலே ஒரு லிட்டர் அரிசி வாங்கி யாறீங்களா? நான் அரிசி குறுணையைத் தேடி. எடுத்துக் கஞ்சி காய்ச்சுறேன். அவசரத்துக்கு ஆளுக்கு ஒரு லோட்டா குடிச்சுக்கலாம்" என்றாள் அவள் மார்பகம் எம்பி அடங்கிற்று.
   "ஊம்" என்று பெருமூச்சுடன் சிரித் தான் சுப்பையா, வேட்டியை ஞாபகமாக புறம் மாற்றிக் கட்டிக் கொண்டான். டவலை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டு புறப்படப் போனவன், மீனாட்சியிடம் அந்த நல்ல சேதியைத் தெரிவிக்கப் பின் வாங்கினான். அப்போது, அடுத்த வீட்டில் வானொலி கேட்டது.
   "மீனாட்சி, மீனாட்சி" என்று ஆனந்தம் பொங்க விளித்தான்.
   “என்னங்க!"
   "ஒரு நல்ல சேதி தெரியுமா?”
   “சொன்னாத்தானுங்களே தெரியும்?”
   "நம் வங்க பந்து ஷேக் முஜ்பீர் ரெஹ்மான் ரிலீஸாகி வீட்டாராம். அவர் இப்போ லண்டனில் இருக்காராம்!”
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/57&oldid=1376155" இலிருந்து மீள்விக்கப்பட்டது