பக்கம்:அமுதவல்லி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68 அமுதவல்லி

சந்தேகம் என்ற சூதுக்குணம் இருக்கிறது பாருங்கள், இதுதான் வாழ்க்கை நாடகத்திற்கே ஒரு வில்லன், சந்தேகத் தூசி படிந்து, கண் மறைந்து, கண் மறைத்து போன கதைகள்-வாழ்வியல் சித்திரங்கள் எத்தனை எத்தனை என்றுதான் உங்கள் எல்லோருக்கும் மனப்பாடமாயிற்றே?

'சந்தேகம்'-இதுவே தான் ஒருவேளை, சிருஷ்டிக்குச் சூத்திரமாக இருக்குமோ?

எனக்கென்னவோ, இந்த விஷயத்திலே துளியந்தனைகூட விசுவாசம் இருப்பது கிடையாது!

நாடகக் கலைஞன் போன்றிருந்த ஓர் ஆணழகன் மோஹினியின் பூங்கரத் தொட்டுவிட்டானாம்! மணி கண்டன் பிரலாபிக்கின்றான். கை தொட்டதால், உரிமை பறிபோய்விடுமா?...உறவு துண்டிக்கப்பட்டு விடுமா?

பாவம், அவள் கொடுத்த பானத்தில் ஈ ஏன் விழுந்து தொலைத்தது?...

'கனவுகளின் கருத்தாழம் இன்னதென்று விளங்கிக் கொள்ள மாட்டாத அந்த ஓர் ஈ என்னுள் வளர்ந்து, வளப்பமுற்றுத் தழைத்துச் செழித்த காதலெனும் கனவுகளைப் பொய்யாக்கி விட்டதே?... வாழ்வாகி நிற்பாள் மோஹினி என்று இருந்தேன். ஆனால், அவளது உதாசீனம் என்னைத் தாழ்நிலைக்குத் தள்ளி விட்டதே?... முதன் முதலில் நான் உங்களுக்குப் பானம் அருளினேன். அதில் ஈ வந்து இப்படி விழுந்து விட்டது. இதை ஓர் அபசகுன மாகவே நான் கருதுகிறேன். தெய்வத்தை எண்ணிப் பிரார்த்தனைப் பாடலுடன் உங்கள் முன் நடனமிடத் திட்டம் புனைந்திருந்தேன் நான். கடைசியில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/70&oldid=1375330" இலிருந்து மீள்விக்கப்பட்டது