பக்கம்:அமுதவல்லி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறுமுகம் 69

அனைத்தும் பாழாகிவிட்டன. என்னை மன்னியுங்கள்” என்று கூறிவிட்டாளே அவள்!

அந்த ஆணழகன் நாடகக்காரன் அல்லனாம் யாரோ ஒர் ஓவியனாம். இயற்கைக்கும் செயற் கைக்கும் பாலம் சமைக்க கடவுள் அனுப்பிய தூதுவனாம் அவன், பெயர்: சுந்தரன். சுந்தரமாகவே இருந்தான். என்னுள்ளே புனையா ஓவியமாகி எழில் காட்டும் அந்தப் பாவையை அவன் சித்திரமாக்கப் போகிறானா?...என் ஒருவனுக்கே உடைமையாக வேண்டுமென்ற லட்சிய நிழலில் ஒதுங்கி இருந்த என்னை ஒதுக்கிவிடவே தான் அவன் இப்படித் தோன்றி விட்டிருப்பானோ? இருக்கும், யார் கண்டார்கள்?

ஆ! என்ன சத்தம், கும்மாளம்? அடைபட்டுக் கிடக்கின்ற கதவுகளைத் திறந்து கொண்டு, அடைபடாமல் வெடித்துச் சிதறி ஓடிவருகின்ற அவர்கள் இருவரின் சிரிப்புக் கலவைக்குப் பெயர் என்ன? நான் என்ன கண்டேன்?...

எனது சேமநிதிக்குப் பொருள் இருக்காதா இனி மேல்?

அதோ, கனவுகள் திறக் கப்படுகின்றன. மோஹினியின் கைகளிலே எத்தனை விதமான ரூபாய் நோட்டுக்கள்!

அவள் பெண்ணா? அவள் கொடுத்த பானத்தை எவ்வளவு ஆர்வத்துடன் குடித்தான். அந்தச் சுந்தரன்?

பின், ஏன் இப்படி மயங்கிச் சுருண்டு நிலைதப்பித் தரையிலே சாய்ந்து விட்டான்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/71&oldid=1375370" இலிருந்து மீள்விக்கப்பட்டது