பக்கம்:அமுதவல்லி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

{{Rule|பூவை எஸ். ஆறுமுகம் வார்ப்புரு:Right85

மோஹினியை நான் திட்டியதற்காகவேண்டி, இவர் என்னைத் திட்டுகிறாரே? அவருக்கு என்னுடைய தவிப்பு எப்படிப் புரியும்? ஒருவர் துன்பத்தையும் தொல்லையையும், திகைப்பையும் தவிப்பையும் இன்னொருவரால் அறிந்துகொள்ள முடியுமென்பது வெதும் அளப்பு. வயசு கடந்தவர்; போகட்டும்!...
சுந்தரம் என்பவருக்குப் படம் எழுதும் அலுவல், அல்லது பிழைப்பு. பைத்தியங்களில் பல ரகம் உண்டு,இல்லையா? இந்த அப்பாவி ஒரு வகை. அவருடைய கடிதம் ஒன்று என் கையில் இப்பொழுது இருக்கிறது. மோஹினிக்கு எழுதியிருப்பதால், இதைக் காதல் கடிதம் என்பதற்கில்லை.ஆனாலும் ,ஒரு விஷயத்தை என்னால் ஊகித்துக் கொள்ள முடிகிறது. காதல் இல்லாவிட்டாலும், காதல் வெறி சூடுபிடித்து, சூடுபட்ட பூனையின் வெறியாகக் கனிந்திருக்கிறது. மோஹினிக்கு எழுதப்பட்ட இம் முடங்கல் என் வழியில் ஏன் முடங்கிக் கிடக்க வேண்டும்? எது எப்படிப் போனால் எனக்கென்னவாம்? என்னுடைய கடிதம் அந்தப் பரத்தையிடம் இந்நேரம் போய்ச் சேர்ந்திருக்கும். கட்டாயம் அவளது கெண்டை விழிகள் கலங்கி, மண்டை ஓடு கனம் தட்டிப் போயிருக்கும்!என்னுடைய உணர்ச்சிகள் நேர்மையான கோணத்தில் இயங்குவதற்குரிய வழி வகைகளில் அவளுடைய நடைமுறைச் செயல்கள் இயக்கப்பட்டிருந்தால், நான் ஏன் இவ்வளவு துாரம் ஆங்காரம் பெறப் போகின்றேன்? இந்த மோஹினியை ஆதியில் நான் பார்த்த நேரத்தில், அசல் தேவதையைப் பார்ப்பது போலவே என் மனசு உணர்த்திய அந்தப் பாவனையை நான் இன்றல்ல, என் சிதை சாம்பலாகும் பரியந்தம் மறப்பேனோ? மறக்கத் தூண்டும் சந்திப்பா அது? 'நான் உங்கள்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/85&oldid=1292361" இலிருந்து மீள்விக்கப்பட்டது