பக்கம்:அமுதவல்லி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 96 அமுதவல்லி

மோஹினியை நேருக்கு நேர் தரிசித்தான். ‘நான் உருவத்தில் பரம ஏழை. ஆனால், உள்ளத்தால் நான் மாபெரும் சீமான். உன் முதற் பார்வை பட்ட கனத்திலேயே என்னுள் இதுவரை நான் அனுபவித்தறியாத ஓர் இன்ப உணர்வு தலையெடுத்து என்னை அலைக் கழித்தது, அடைந்தால் உன்னையே அடை வது இல்லையென்றால் சாவது என்று வந்திருக்கிறேன். என் புனித மிகு ஆண்மைமீது உறுதி வைத்துப் பேசக்கூடிய பேச்சு இது!’ என்று வீறு கொண்டு முழங்கியிருக்கின்றான் அவன்,

அவள் சிரித்தாளாம்!

சிரிப்பென்றால், எதிரியைத் துரசாக நிர்ணயித்து எடை போட்ட ஏளனச் சிரிப்பு.

இன்பசாகரன் அவளை ஒருமுறை விழிகளால் விழுங்கிவிட்டுப் பிரிந்து விட்டான்.

அடுத்த பத்தாவது நிமிஷம், மோஹினியின் முன்னே ஓர் அதிசயம் ஏடவிழ்ந்தது.

இன்பசாகரன் உயிரை மாய்த்துக் கொள்ளத் தீர்மானித்து மோஹினியின் வீட்டுக் கேணியில் விழுந்திருக்கிறான். அவனுக்கு ஆயுள் கெட்டி, யாரோ காப்பாற்றி விட்டார்கள்.

இன்பசாகரனைப் புரிந்து கொண்டாள் மோஹினி. அவள் தன்னுள் என் தவம் இப்போது தான் பொருள் பெறப் போகிறது என்று கூறிக் கொண்டாளாம்!

இதோ, அழைப்பு. அவ்விருவரும் இனி உயிரும் உயிருமாகப் போகிறார்கள்! வாழ்க!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/98&oldid=1376529" இலிருந்து மீள்விக்கப்பட்டது