பக்கம்:அமுதவல்லி.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறுமுகம் 197

__________________________________

       புதுப் பிறவியுடன் ஜோடியாகக் கைசேர்த்து நடந்தார்கள்: தேவ தரிசனம் கிடைத்தது. திரும்பும் போது இன்னொரு ஜோடி தென்பட்டது.
    “ஒ, தாராவா?... வாருங்கள். அத்தான்! என்று வரவேற்றாள் வாணி.
     அத்தான், செளக்கியமா?... வாணியின் முயற்சி இல்லையென்றால், எனக்கு இவ்வளவு சீக்கிரம் கலியாணம் நடந்திருக்க முடியாது ..!” என்று குசலம் விசாரித்துக் கதை சொன்னாள் தாரா.
    “அத்தான், தாராவின் கணவர் இவர், இவர் எனக்கு அத்தான் முறை வேணும். புதுமணத் தம்பதிகள் ரயிலுக்கு வந்திருக்கிறார்கள். ரயில் புறப்பட்டு விட்ட அவசரத் தில் ஆளுக்கொரு பெட்டியில் ஏறி விட்டார்களாம் - உங்களிடம் சொல்ல மறந்திட்டேன். நேற்று இரவு ஆடித்த புயலிலும் மழிையிலும், என் அத் தான் இல்லையென்றால், நான் இந்நேரம் உங்களைக் காணும் பாக்கியம் கூடச் செய்திருப்பேனோ, என்னவோ? உங்களைப் போலவும் மூர்த்தி அத் தான் மாதிரியும் உலகத்திலே நல்ல வங்க நர்லு பேர் இன்னம் நடமாடறதினாலேதான், ராத்திரி அடிச்ச பேய்க்காற்றும் மழையுங்கூட சீக்கிரம் ஒய்ஞ்சிடுச்சு?’’

முகிந்தனின் உள்மனம் அணு அணுவாகச்செத்துக் கொண்டிருந்தது. . தாரா! என்னை ம்ன்னிக்க மாட்டாயா? அறியாப் பருவத்திலிருந்து இன்று வரை ஏன் என்றுமே என் மனத்தை விட்டு அகலாமல், நினைத்தபோது நினைத்தபடி நறுமணம் பரப்பும் புனிதமான மனோரஞ்சிதப்பூ நீ!. வாணி, என்மீது உனக்கு இருக்கும் உரிமைக்கு இனி துளிகூடப் பங்கம் வராது. உன்னை இன்று தான் பரிபூரணமாகப் புரிந்து கொண்டேன்!...'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/199&oldid=1378553" இலிருந்து மீள்விக்கப்பட்டது