பக்கம்:அமுதவல்லி.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112 அமுத வல்லி __________________________________

   புதுக்குளத்துத் தென்கரை ஓரத்தில் வந்து நின்று வேர்வையை வழித்தெடுத்தாள் பொன்னரசி; சிறு குடல் பெருங்குடலைக் கவ்வியது; தலை சுற்றியது. பயம் உள்ளடங்கிய அந்தக் குளத்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்தாள். ம்!,. இன் னிக்கு நடுச் சாமத்தோட எல்லாம் முடிஞ்சிடும்!'
   பிறந்த மண்ணுக்கு ஓடினாள் அவள் மனோரதப் பயணம். பெற்றவர்கள் மறைந்து போனார்களாம். கந்தசாமி குடியும் குடித்தனமுமாக ஊரில் இருக் கிறானாம்! பட்டணத்தில் நாட்டு வைத்தியர் நல்ல தம்பியை எதிர்பாராமல் சந்தித்த போது கிடைத்த விவரங்கள் இவை. 
     தேம்பிய நெஞ்சம் அவளுடைய 'விதி'யை நோக்கிக் கேட்டது: “இத்தனை காலமாக எத்தனையோ ஊரெல்லாம் சுத்தி அலுத்தேனே! எம் மகனை ஒருவாட்டியாச்சும் காட்டப்பிடாதா? ஒரு வாட்டி எங்கண்ணைக் கண்டுக்கிட்டா, நான் அப்பவே நெறைஞ்ச மனசோடே செத்திடுவேனே?...இந்த ஆசையாச்சும் பலிக்குமானுத் தான் அங்கங்கே வேலை வெட்டி செஞ்சு, கிடைச்ச சோத்துப் பறுக்கையைச் சாப்பிட்டு உசிரைக் காப்பாத் தினேன். ஆனா, என் ஆசை அவிஞ்சிருச்சு: இனி எங்கே என் கண்மணியை காணப்போறேன்? ஐயோ. நான் மாபாவி...!
  குளத்துக்குக் கீழ் இறக்கத்தில் ஓடிய சாலையில் நிழலடர்ந்த மரங்கள் தென்பட்டன. சறுக்குப்படி வழியாக அவள் இறங்கினாள். கால் சறுக்கியது. முதல் படியில் விழுந்த அவள் மறுபடிக்குப் புரண்டாள். பிறகு அப்படியே உருண்டு விழுந்து விட் டாள், பாவம்!
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/114&oldid=1377193" இலிருந்து மீள்விக்கப்பட்டது