பக்கம்:அமுதவல்லி.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறுமுகம் 169

சாசுவதமான அடையாளமா அக்காவோடி இந்தத் தாலி எப்பவுமே நம்மகிட்ட இருக்கவேணுமுங்க. அத்தான்!” என்று கண்ணீரும் கம்பலையுமாக வேண்டிக் கொண்ட தில்லைநாயகியின் சொற்கள் எதிரொலித்தது.

எவர்ஸில்வர் சம்புடம் விழுந்தது. அதில் தான் பார்வதியின் அந்தத் தாலி இருக்கிறது!

ஆசையோடு சம்புடத்தை எடுத்து, ஆர்வத்தோடு திறந்தான் அவன்.

எங்கே அந்தத் தாலி?:ஐயோ, பார்வதி!’

ஓலம் பரப்பினான் சோமையா. சூன்யத்தைச் சூறையாடுபவன் போன்று வெறித்து நோக்கினான் புத்தி பேதலித்து விட்டதா? சமையற் கட்டுக்கு ஓடினான்.

“தில்லை? என்னோட அன்புப் பார்வதிக்கு நான் கட்டின அந்த மாங்கல்யத்தைக் காணோமே? எங்கே போயிடுச்சு அது?’ என்று கூவினான்.

தில்லை நாயகி ஏன் மெளனம் சாதிக்கிறாள்?

“ஊம், சொல்லு!’

அத்தான், கோபப்படாமல் கேளுங்க. 'கல்யாணம் கட்டி ஒரு வருஷம் ஆகியும் இன்னமும் தாலிக் கயிற்றை மாற்றி, ஒரு தங்கச் சங்கிலி பண்ணி அதிலே தாலியைக் கோத்து ஜம்னு போட்டுக்கிட வழக்கம் தெரியலையே உனக்கு? அப்படின்னு அக்கம்

அ -11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/171&oldid=1376663" இலிருந்து மீள்விக்கப்பட்டது