பக்கம்:அமுதவல்லி.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ்.ஆறுமுகம்

199


அந்த ஆள், பார்வையைத் தாழ்த்தி விட்டவனாக நின்று கொண்டிருந்தான். கன்னங்களின் இரு மருங்குகளிலும் நீர் முத்துக்கள் தவழ்ந்தன. தவழ்ந்து கொண்டிருந்த அந்தக் 'கறுக்கரிவாள் மீசை'யின் அடியோரங்களில் ஈரத்தின் கசிவு இருந்தது.

வாடிய கோல விழிகளை மூடித் திறந்தாள் அவள். கொட்டாவி பறந்தது.

நெஞ்சத்தின் மையத்தில் பதிந்து விட்டிருந்த அந்தப் பயங்கரக் காட்சி'யினை இப்போதும் அவள் தரிசிக்கத் தவறவில்லை. ஆத்தா இனிமெ நானு என்ன செய்ய ஏலும்?...இந்தப் பாளத்த மண் ணிலே மறுகாவும் கண்ணு முழிக்கிறத்துக்கு எம் மண்டையிலே விதிச்சுப்புடுச்சாங்காட்டி? மூத்தவளே, ஏதுக்கு இந்தப் பொட்டைக் குட்டியை இம்மாந் தொலைவுக்கு தலைமாடு கால்மாடாய் வீசியெறிஞ்சு அலைக் கழிக்கிறே?... உன்னோட குஞ்சில்லையா நானு?... ஏதுக்கு இந்த வசத்திலே சோதனை காட்டினே? ஐயோ! நானு பாவி ஆகிப்பூட்டேனே? . ஐயையோ!.. சமைஞ்ச பொண்ணு நானு, ஒஞ் சொத்திலே குத்து மண்ணையா வாரி வீசிப்போட்டேன்!... சொல்லு, ஆத்தா!... ஊம்! நீ பேச மாட்டே!... அதுக்காகவத்தான் விதி பேசிப்புடுச்சுப் போலே! ஆத்தாடியோ!...

நெஞ்சு பிளந்துவிட துடித்துக் கொண்டிருந்ததோ ?

நெஞ்சின் இதயப் பகுதியைப் பிடித்து அழுத்திக் கொண்டாள் அவள்.

எரிமலையின் வாயைப் பொத்தி விட முடியுமோ?

செம்பவளம் தலையைக் குவிந்து நேத்திரங்களை இறக்கினாள். கண்டம் தீயாக எரிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/201&oldid=1377168" இலிருந்து மீள்விக்கப்பட்டது