பக்கம்:அமுதவல்லி.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2 12 அமுதவல்லி

கிணு புல்லு செதுக்க ஆரம்பிச்சேன். முசுன்னு மப்பு வேறே மானத்திலே விளுந்திச்சு. அந்தச் சமயங்கண்டு, பேய் பிசாசு தன்மையிலே யாரோ ஒரு ஆளு. பின்வசமா நலியாம வந்து லபக்கினு ஒரு தடித்துப் பட்டியை எம்மூஞ்சியிலே போட்டு மூடி அப்பிடியே குண்டுக் கட்டாத் தூக்கி லாந்திக்கினு போயி என் னமோ ஒரு பத்தை ஒண்டலுக்கிட்டே என்னைப் போட்டு ..... ஐயையோ! ஈனச் செம்மம் ஆகிப் போனேனே! ஆத்தாடியோ! ஐயையோ!...’

வெடித்தது விம்மல். கைகள் இரண்டையும் தரையில் ஓங்கி ஓங்கி அடித்தாள். நலிந்துபோயிற்று. அவள் முகம். நீர்ச்சுழிப்பு வேறு. ‘எம் மூஞ்சி துப்புரவா மூடப்பட்டு போச்சு. அதனாலே வந்த ஆம்பளையோட மூஞ்சி முகரையை நானு கண்டுக்கிடவே வாய்க்கலே எம்பலம் எனக்கு உதவலே. எம்பிட்டு ஆங்காரத்துக்கு மாத்திரம் அப்பைக்கு ஒரு பாதை கிடைச்சிருந்திச்சு தின்னா, அப்பவே அந்த ஈன மிருகத்தை இந்தப் பல்லாலேயும் இந்தச் சூரி நகத்தாலேயும் கடிச்சுக்கு தறித் துப்பிப் போட்டிருப்பேனே! அதுக்குக் கூட ஒரு வழி . கிடைக்காமப் போயிட்டுதே! இனிமே, அந்தப் பாளத்த பாவியை நானு எப்பிடிங்க இனம் காண ஏலுமுங்க? ஊருக்கு ஒசந்தவளே! அப்பவே என்னைக் கொண்டுகிட்டுப் போயிறப்புடாதா? ஐயோ!’ மீண்டும் அழுகை மீண்டது.

ஒருகல் தொலைவில் இருந்த புண்ணிய பூமியின் அமைதி இங்கே வந்து அனைத்தது. எங்கோ கதறிய சாக்குருவி களின் அபயஒலம் இங்கே வந்து ஒடுங்கியது. வங்கு நாயின் ஊளைச்சத்தம் வேறு மடங் கியது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/214&oldid=1378270" இலிருந்து மீள்விக்கப்பட்டது