பக்கம்:அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23


இயற்கையான உதைக்கும் பண்பிற்கு - கால் பந்தாட்டம்.

இயல்பாக பிடிக்க, எறிய - கைப்பந்தாட்டம்,எறிபந்தாட்டம்,கூடைப் பந்தாட்டம்.

கோல்களால் அடித்து அல்லது தள்ளி மகிழும் பண்புக்கு - கிரிக்கெட் ஆட்டம்,மென் பந்தாட்டம், வளைகோல் பந்தாட்டம், கோல்ப் பந்தாட்டம், பில்லியர்ட்ஸ், ஸ்நூக்கர் போன்ற ஆட்டங்கள்.

சுண்டி ஆடும் பண்பிற்கு - கேரம் போன்ற ஆட்டங்கள்.

இப்படிப்பட்ட விளையாட்டுக்கள், மனித தேவைக்கேற்ப, மனித ஆசைகளுக்கேற்ப பிரிந்து விரிந்து வந்திருப்பது தான் நமக்குப் பேராச்சரியத்தைக் கொடுப்பதாகும்.

உதைக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்க வந்த கால்பந்தாட்டத்தில் இன்று 11 வகை ஆட்டங்கள். கோல்களைப் பயன்படுத்தி ஆடும் ஆட்டங்களில் 20 வகை, ஒரு குறிப் பிட்ட எல்லைக்குள் இருந்து ஆடும் ஆட்டங்களில் 40 வகை. மேசையின் மீது அல்லது அட்டைகள் மீது ஆடப்படுகின்றதாக 100 வகைகள் . சீட்டாட்டம் என்றாலோ 1000 வகை.

இப்படி ஆயிரக்கணக்காகப் பிரிந்த விளையாட்டுக்கள் அனைத்தும் அர்த்தம் நிறைந்தவைகளாகவே இருக்கின்றன.

அர்த்தம் உள்ள விளையாட்டுக்கள் அனைத்தும், அதனதன் தன்மைகளால், ஆடும் மக்களின் ரசனைக்