பக்கம்:அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24


கேற்ப, பிரிக்கப்பட்டுள்ளது. கீழ்க் காணும் பட்டியல், விளையாட்டுக்கள் தோன்றிய அர்த்தத்தை மேன்மைப் படுத்தியிருப்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

விளையாட்டுக்களின் தலைப்பும், அவற்றிற்குரிய விளையாட்டுக்களும் தரப்பட்டிருக்கின்றன :

1. பெரும் ஆடுகள விளையாட்டுக்கள் (Field Games)

உதாரணம்: கால் பந்தாட்டம், வளை கோல் பந்தாட்டம் கிரிக்கெட், தளப் பந்தாட்டம், மென் பந்தாட்டம், போலோ கர்லிங் முதலியன.

2. சிறு ஆடுகள விளையாட்டுக்கள் (Court Games)

(உ. ம்) கூடைப் பந்தாட்டம், கைப்பந்தாட்டம், பூப்பந்தாட்டம், இறகுப் பந்தாட்டம், வளையப் பந்தாட்டம், டென்னிஸ் முதலியன.

3. பனித்தரை விளையாட்டுக்கள்: (Rink Games)

(உ. ம்) பனி வளைகோல் பந்தாட்டம், காலுருளையுடன் வளை கோல் பந்தாட்டம், கர்லிங் போன்றவைகள்.

4. நெடுந்தூர இலக்கு விளையாட்டுக்கள் (Course Games)

(உ. ம்) தரைக் குழிப் பந்தாட்டம் (Golf) கிராகட் [Croquet]

5. நீச்சல் குள விளையாட்டுக்கள் (Water Games)

(உம்.) தண்ணிர் போலோ; ஆக்டோபுஷ் போன்றவை.