பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 பார்கள். பொழுது விடிவதற்கு வெகு நேரத்திற்கு முன்பே அவர்களிற் பெரும்பாலானவர்கள் கண் விழித்து எழுந்தவர் களாகையால் பிற்பகலிலே அவர்கள் உறங்குவார்கள். பிறகு படார் படார் படாரென்று வாணவெடிகள் இதில் தொல்லேயென்னவென்ருல் பட்டாசு வெடிக்கத் தொடங்கி விட்டால் பிறகு அது கிற்பதாகவே காணுேம். உறங்கச் செல்ல யாருக்கும் விருப்பமில்லை. மற்றவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிருர்கள் என்பதைப்பற்றி யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. சிறுவர்கள் அனைவருக்கும் பட்டாசு கிடைத்திருக்கிறது. அது எங்கும் வெடிக்கிறது. அந்த காளோடுகட்ட அது முடிகிறதில்லை. பெரும்பாலான மக்களுக்கு ஓரளவு சலிப்பு ஏற்படும் வரையில் பட்டாசு வெடி கடந்து கொண்டேயிருப்பதாகத் தோன்றுகிறது. சுவருக்கு அந்தப் புறத்திலுள்ள வீட்டிலே மோட்டார் சைக்கிள் வைத்திருக்கும் பையன் ஏராளமான வாணவெடி களுக்குள்ளே எரியும் தீக்குச்சியைப் போட்டுவிட்டான், அவைகள் எல்லாத் திசைகளிலும் சிதறியோடி வெடித்தன. விருந்தாளிகளில் சிலருக்குத் தீச்சுட்டுக் காயம் ஏற்பட்டு விட்டது. அதஞல் அங்கே ஓரளவு பரபரப்பு உண்டாயிற்று. ஜூடியின் தங்தை அங்கு சென்று அவர்களுக்குக் கட்டுப் போட்டார். இருவரைத் தம் காரிலேயே ஏற்றிக்கொண்டு ஆஸ்பத்திரிக்குச் சென்ருர், ஆளுல் யாரும் அதிகம் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. பெஞ்சமினுக்குக் கொஞ்சம் பயம். ஜூடியின் தாயாருக்குக் கோபம். குழந்தைகளுக்கு உணவளிக்கப்போதிய வசதியில்லாதவர்கள்கூட முட்டாள் தனமாகத் தங்கள் கையிலுள்ள காசெல்லாவற்றையும் இந்தப் பட்டாசிலே செலவழிக்கிருள்கள்” என்று குறை கூறினுள் அவள்,