பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 கொண்டிருந்தனர். சேலைகள் குவிந்து கிடக்கும் அந்த ண்ேட மேஜை பகட்டான நிறங்களையுடைய பூப்பாத்தி யைப் போலிருந்தது. திடீரென்று அம்மணிப்பாட்டி எழுங் தாள். 'வா காம் போய் கல்ல சேலைகள் சிலவற்றைப் பார்ப் போம்” என்ருள் அவள்.

  • இவையெல்லாம் கல்லவையல்லவா?’ என்று ஜூடி கேட்டாள்.

அம்மணிப்பாட்டி புன்முறுவல் பூத்தாள். "நீயே பர்ர்ப்

- பாய் அக்தச் சமயத்தில் மத்தளம், குழல் முதலிய வாத்தி யங்கள் ஒலித்தன. மூலையை விட்டுத் திரும்பி உயரமான பெரிய மரத்தேர் ஒன்று வந்தது. வர்ணம் தீட்டியும், பொன் முலாம் பூசியும் சிம்மாசனம் போலத் தோன்றிய அதன் மேல் விதவிதமான செதுக்கு வேலைகள் கிறைந்த விதானத் தின்கீழ் ஒரு சிறிய ஊஞ்சலிருந்தது. இரண்டு தெய்வ வடிவங்களே அது தாங்கிற்று. பெரிய மரச்சக்கரங்கள் கிரீச்சிட்டுச் சென்றன. கயிற்றைக் கட்டித் தேரை நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் இழுத்துச் சென்றனர். 'தெய்வங்களே வைத்து இழுப்பதால் அவர்களுக்குப் புண்ணியம் கிடைக்கிறது” என்ருள் அம்மணிப்பாட்டி. "அவர்களுக்கு இதிலே விருப்பமிருக்கிறதாகத் தெரி கிறது” என்று கூறினுள் ஜூடி. ஏனென்ருல் அவர்கள் ஆரவாரம் செய்துகொண்டும், சிரித்துக் கொண்டும் குதுகலத்தோடிருந்தனர். வயதான இருவர் தேரின் மீது அமர்ந்து வாத்தியம் வாசித்தனர். "எல்லாம் நல்லதுக்குத்தான். கடவுளுக்குச் சேவை செய்வதை காம் விரும்பவேண்டும் என்பது கடவுளின் எண்ணம்” என்ருள் அம்மணிப்பாட்டி.