பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டரடிப் பொடிகள் 207 அரங்கநாதனும் அரங்கநாச்சியாரின் வேண்டு கோட்குச் செவிசாய்க்கின்றான். தமது திருக்கோயில் பாத்திரங்களுள் பொன்வட்டில் ஒன்றை எடுத்துக் கொண்டு ஒரு பணியாளன் வடிவத்தை மேற்கொண்டு விலைமாதின் வீட்டில் படியாய்க் கிடக்கும் விப்ரநாராயணருக்குத் தெரியாமல் தேவதேவியின் இல்லத்திற்கு எழுந்தருள் கின்றார்; வாயிற் கதவைத் தட்டுகின்றார், தேவதேவி உள்ளிருந்தபடியே நீ யார்? எங்கு வந்தாய்?' என்று கேட்கின்றாள். நம் பெருமாள், அடியேன் அழகிய மணவாள தாசன் விப்ரநாராயணர் அனுப்பவந்தேன்' எனகின்றார். இந்த விடை கேட்டு தேவதேவி உடனே திருக் காப்பு நீக்குகின்றாள். 'வந்த வேலை என்ன?’ என்று வினவுகின்றாள். அரங்கநாதன் தான் கொணர்ந்து வந்த பொன்வட்டிலை அவள் கையில் கொடுத்து, அம்மையே, இந்தப் பொற்கலத்தை விப்ரநாராயணர் உன்னிடம், தருமாறு சொல்லி அனுப்பினார்' என்று சொல்லுகின்றார். அவளும் மிக்க அனபுடன் அவரை உள்ளே வரச்சொல் லும்' என்று இசைவு தருகின்றாள். பத்துடை அடியவர்க்கு எளியனான எம்பெருமான் விப்ரநாராயணரிடம் வந்து, தேவதேவி உம்மை உள்ளே வரச் சொன்னாள் என்று சொல்லிவிட்டுத் தம் போக்கில் சென்று விடுகின்றான். செவிக்கினிய அச் செஞ்சொல் விப்ரதாராயணருக்கு தேனாய் - தேவாமிர்தமாய் - இனிக்கின்றது; உள்ளங் குளிர்கின்றது; உடலும் பூரிக்கின்றது. தேவதேவியின் இல்லத்தினுள் சென்று விடுகின்றார். விப்ரநாராயணனுக்குத் தண்டனை: அன்று இரவு ஒருவாறு கழிந்து பொழுதும் புலர்கின்றது. அரங்கநாதன் சந்நிதியின் திருக்காப்பு நீக்கியவுடன் பாத்திரங்களுள் சிறந்ததொரு பொன்வட்டில் காணப்பெறாமை தெரி கின்றது. கோயில் அதிகாரிகள் செய்தியை அரசுக்கு அறிவிக்கின்றனர். அரசும் உடனே நடவடிக்கை எடுக் கின்றது. களவு கண்டு பிடித்தற் பொருட்டு அர்ச்சகர்,