பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூவர் ஏற்றிய மொழி விளக்கு §§ விளக்கை ஏற்றுகின்றார் பூதத்தார். இந்த விளக்கினால் அகத்தே மண்டிக்கிடந்த உள் இருட்டும் நீங்கி விடுகின்றது. உடனே அந்தப் பேயாழ்வார் நான்காவது ஆளைக் கண்டு பிடித்து விடுகின்றார். அந்த எக்களிப்பே ஒரு பாசுரமாக வடிவங்கொண்டு நான்காவது ஆள் எம்பெருமானே (திருக்கோவலூர்த் தீங்கரும்பே") என்று காட்டி விடு கின்றது. பாசுரம் இது: திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்; திகழும் அருக்கன் அணிநிறமும் கண்டேன்; - செஆக்கிளரும் பொன் ஆழி கண்டேன்; புரி சங்கம் கண்டேன்; என் ஆழி வண்ணன்பால் இன்று." திரு . இலக்குமி; அருக்கன் - சூரியன்; செருகிளரும் - போரில் வல்லமை காட்டும்; ஆழி - சக்கரம்: ஆழி வண்ணன் - கடல் நிறத்தவன்; பேயாழ்வார் முதன் முதலாகப் பெரிய பிராட்டியாரின் அருள் வடிவத்தைக் காண்கின்றார்; பொன்மேனியை யுடைய அன்னை யாருடன் கூடிய எம்பெருமானின் மரகதத் திருமேனி இப்போது பொன்மேனியாகவே காட்சியளிக் கினறது. மரகத மலையில் உதித்து ஒளிவீசி வரும் இளஞாயிறு போலத் தோன்றி இருவரது ஒளியையும் - பொன் ஒளியும் மரகத ஒளியும் கலந்து ஒளிர்கின்ற அந்தக் கலப்பு ஒளியையும்-காண்கின்றார்; திகழும் அருக்கன் அணி நிறமும் கண்டேன் என்பதால் இது பெறப்படு கின்றது. இருவர் சேர்த்தியால் பிறந்த முதாய சோபை' என்பது பெரியவாச்சான் பிள்ளையின் வியாக்கியான விளக்கம். §