பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூவர் ஏற்றிய மொழிவிளக்கு H} { வாக்குவேன். பொய்கையாழ்வாருக்குப் பரஞானம், பரம பக்திகளின் சாயை மாத்திரம் தோன்றி பரபக்தியே விஞ்சியிருக்கும். பூதத்தாழ்வாருக்குப் பரபக்தி முற்றிப் பரிபக்குவமாகி மேலே பரமபக்தி தோன்றக் காரணமான பரஞானமே விஞ்சியிருக்கும். பேயாழ்வாருக்குப் பரம பக்தியே விஞ்சிப் பரபக்தி, பரஞானம் ஆகிய இரண்டும் அதற்குள்ளே மறைந்து கிடக்கும். இம்மூவருடைய அருளிச் செயல்களினின்றும் இந்த நிலைகளை நம் பண்டையோர் கண்டறிந்து தாம் கண்டவாறே இங்கனம் வகுத்தருளி புள்ளனர். இங்ங்ணம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றின் ஒளியும் மற்றவற்றின் ஒளியின்மையும் எம்பெருமானுடைய சங்கற்பத்தினால் உண்டானவை என்பது இவர்தம் உள்ளக் கிடக்கையாகும். ஆகவே, இதில் எவ்வகையான மறுப் புக்கும் இடம் இல்லை. இந்த மூன்று நிலைகளும் முத்தி யிலேயே உண்டாகக் கூடியவையேயாயினும் மயர்வுற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார்கட்கு மாத்திரம் இங்கிருக்கும்போதே எம்பெருமானுடைய திருவருளால் விளைந்தனவாகும். இனி, இவற்றை எம்பெருமானிடம் வேண்டிப் பெறுதலும் உண்டு. பொய்கையாரின் பரபக்தி : எம்பெருமானை நேரில் காணவேண்டும் என்கின்ற ஆவலே பரபக்தி என்று கூறினேன். இதை பிறந்தபோதே அவர் அவனுடைய திருவருளால் அடைகின்றார். அறிவு நடையாடுகைக்குத் தகுதியில்லாத காலத்திலே - கருவறை வாழ்க்கைக் காலத் லே - திரு அரங்கத்தில் பள்ளி கொண்டிருக்கும் பெரிய பெருமாளின் பெருமைகளையெல்லாம் நேரில் கண்ட தாகக் கூறுவார். கருவரங்கத் துட்கிடந்து கைதொழுதேன் கண்டேன் திருவரங்க மேயான் - திசை : 38. டிெ - 6.