பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248

ஆழ்வார்களின் ஆரா அமுது


அடைந்தாலும், அவனை வளர்க்கும்போது பெறும் பேரின் பத்தை அடையப் பெறாதவள். ஆ ை ல் கண்ணனைக் குழந்தை நிலையிலிருந்து வளர்க்கும் பேறு பெற்றவள் யசோதை. இவள் ஈன்ற தாயாகவே ஆகிவிடு கின்றாள். இவள் பேசுகின்றாள்: :பன்னிரண்டு மாதம் உன்னை என் வயிற்றிற் சுமந்து பெற்ற நான் உடனே உன்னைத் திருவாய்ப்பாடிக்குப் போக்கிவிட்டேனாதலால் உன்னைத் தொட்டிலிவிட்டுத் தாலாட்டுதல் முதலிய ஆனந்தாதுபவங்களை யசோதை பெற்றாளன்றி பாவியே னாகிய நான் பெற்றேன் இல்லை என்று புலம்புகின்றாள். இதையே தாய் நிலையிலுள்ள ஆழ்வார் வாக்கில் காண் போம். ஆலையிலிட்டு ஆடத்தகுந்த நீண்ட கரும்பு போன்ற கண்ணனே, உனக்குத் தாலாட்டு. தாமரை போன்று அகன்ற திருக்கண்களையுடையவனே! உனக்குத் தாலாட்டு. யானைக்குட்டி போன்றவனே! உனக்குத் தாலாட்டு. மனம்மிக்க நீண்ட திருக்குழலையுடைய என் மகனே! உனக்குத் தாலாட்டு என்று இப்படிப் பலகாலும் சொல்வி என் வாய் நிறைவு கொள்ளும்படி உன்னைத் தாலாட்டும் பேறு இல்லாத அன்னைமார்களில் கடை கெட்ட தாயாய் இரா நின்றேன். நான் (1) என்கின்றாள். தோலாட்டுப் பேறு மாத்திரமேயா நான் இழந்தது? மை இடப்பெற்ற செந்தாமரை மலரையொத்த கண் களாலே தொட்டிலின் மேற்கட்டியில் தொங்கும் ஒரு பொருளைப் பொருந்தப் பார்த்துக் கொண்டும் கறுத்த புறந்தாளையுடையனவும், செந்தாமரை மலரையொத்த சிறுத்த சிவந்த அகவாயையுடையனவுமான நினது திருவடி களை முடக்கிக் கொண்டும் கழுத்தளவும் பருகின நீர் விளங்கப்பெற்ற மேகக் குட்டி போல அழகிய சிறுத்த திருவிரல்கள் யாவற்றையும் உள்ளங்கையிலே அடங்கும்படி முடக்கிப் பிடித்துக் கொண்டும் ஆணைக்கன்று கிடக்குமாப் போலே பள்ளிகொண்டருளும் அழகை அநுபவிக்கப்