பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274

ஆழ்வார்களின் ஆரா அமுது


திற்குப் படுகின்றது. புதிதாகத் திருக்கோயிலை எழுப்பு பவர்கள் சிலைவடிவமான மூலத்திருமேனி எழுந்தருளப் பண்ணுவதற்காக மலை முகடுகளினின்று பெரும் பெரும் பாறைகளை உடைத்துக் கொண்டு போகின்ற வழக்கம் உள்ள தாதலால் அதுவும் ஏற்றதல்லவென்று தோன்று கின்றது. தோன்றவே, அங்ங்ணம் பெயர்த்துக் கொண்டு போகக் கூடாததான கானாறாகப் பிறக்கவேண்டும் என்று கருதுகின்றார். தேனார் பூஞ்சோலைத் திருவேங் கடமலைமேல் கானாறாய்ப் பாயும் கருத்துடையேன் ஆவேனே (7) என்பது பெருமாளின் திருவாக்கு. கானாறாய் பாயும் கருத்துடையேன் ஆவேனே (?) என்று பாரித்தலைச் சற்று ஆராயவே அதிலும் ஒரு குறையை உணர்கின்றார். ஆறு எப்போதும் வெள்ள மிட்டோடுவதல்ல; சில காலங்களில் வற்றியும் போகும்: அப்போது திருமலை வாழ்க்கை இறந்ததாய்விடும். அங்கன மன்றி எப்போதும் ஒருதன்மையாகத் திருவேங்கட. முடையானை சேவிக்கவருகின்ற பாகவதர்களின் போத துரளி படும்படி வழியாகக் கிடக்கும் நிலைமை தனக்கு வாய்க்கவேண்டும் என்று வேண்டுகின்றார். நெறியாய்க் கிடக்கும் நிலையுடையேன் ஆவேனே (8) என்று கூறுவதைக் தாண்கின்றோம். நெறியாகக் கிடப்பதிலும் ஒரு குறையை உணர் கின்றார் ஆழ்வார். வழியென்பது அவரவர்களின் செளகர்யத்திற்குத் தக்கபடி மாறுபடும்: திருப்பதியிலிருந்து திருப்பதிக்குச் செல்லும் வழி மிகச் சிரமமாயிருக்கிறதென்று சந்திரகிரி வழியாகப் போகக்கூடும்; ஓரிடத்தில் ஒன்றுதான் வழியென்று சொல்ல முடியாத தாகையாலும், வழியானது விலகி நிற்பதாகையாலும், வழியாக வேண்டும் என்று