பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12] போய்க்கொண்டுதாணிருந்தார்கள். எதற்காக அந்தக் கண்டிப்பு என்று ஜூடிக்கு விளங்கவில்லை. கரையில் மோதும் அலேகளுக்கு அப்பால் சென்று ஹரிதாஸ் கீழ் ன்ை. அவன் ஒரு கத்தியை எடுத்துக்கொண்டு சென்ருன் அவன் தந்தையும் சுருமீன்களைப் பற்றிக் கேள்விப்பட்டார். அதனுல் கடலில் நீக்தக்கூடாதென்று அவனைத் தடை செய்துவிட்டார். இன்னும் கடிதமே வரவில்லை. "ஏதாவது ஓரிடத்திற்குப் போய்ப் பார்த்து வரலாமென்று தோன்றுகிறது. இப்பொழுது வெய்யிலும் அதிகமில்லை. சாலைகளும் சரியாக இருக்கும்" என்று ஜூடியின் தாய் சொன்னுள். "சரி, தேசீய வளர்ச்சித் திட்டம் நடைபெறும் ஏதாவதொரு கிராமத்திற்குப் போய் அங்கு என்ன நடக் கிறது என்று பார்த்து வந்தால் என்ன?’ என்று அவள் தங்தை கேட்டார். ஜூடி திகைப்போடு நோக்கினுள். தேசீய வளர்ச்சித் திட்டத்தைப் பற்றி நான் சொன்னது உனக்கு கினை வில்லையா? இந்தியா வளம்பெறுவதற்கு, கிராமத்தில் வசிக்கும் மக்கள், அவர்களுக்குத் தேவையானவற்றில் எவற்றை யெல்லாம் செய்துகொள்ள வேண்டுமோ அவற்றையெல்லாம் செய்ய உதவும் திட்டங்தான் அது. அந்தத் திட்டம் நடக்கும் பிரதேசம் ஒன்றிற்குப்போய், பஞ்சைக்கொண்டு செய்யும் தொழில்களையும், பள்ளிக் கூடங்களையும், புதுப்பயிர் வகைகளையும், மற்றவற்றையும் பார்த்து வரலாம். பார்க்க கன்ருகவே இருக்கும். ஆயிரக் கணக்கான ஆண்டுகளாகச் சும்மாயிருந்த ஏழைமக்கள் திடீரென்று தாங்களே சொந்தமாகக் காரியங்கள் செய்யத் தொடங்கி யிருப்பதைப் பார்ப்பது உண்மையில் உற்சாக மாகவேயிருக்கும். நாம் உணவைக் கையோடு எடுத்துக் கொண்டுபோய் திறந்த வெளியில் சாப்பிடலாம். தங்கும்