பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானப் பூங்கொடி 27. 2. இப் பெருமாட்டியின் பாசுரங்களில் உவமை, உருவகம் முதலிய அணி நயங்களைக் காணலாம். கார்மேனிச் செங்கண் கதிர மதியம் போல் முகத்தான், நாராயணன் (1), முகில் ஊழி முதல்வன்போல் மெய் கறுத்தல், ஆழிபோல் மின்னுதல், வலம் புரிபோல் நின்றதிர்தல் (4), குகையில் உறையும் சிங்கம் தீவிழித்து, வேரி மயிர் பொங்க எப்பாடும் போந்துதறி மூரி நிமிர்ந்து முழங்கில் புறப்பட்டுப் போதல் போல் கண்ணன் ጨ}U வேண்டும் எனக்கூறல் (23), அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான பங்கமாய் வந்து கண்ணனின் பள்ளிகட்டிற் கீழே சங்கம் இருப்பார் போல் ஆயச்சிறுமிகள் திரளுதல், கிண்கிணி வாய் செய்த தாமரைப் பூப்போல செங்கண் சிறுச்சிறிதே கண்ணன் ஆயர்மகளிரை நோக்குதல் (22), திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல் அங்கண் இரண்டும் கொண்டு எங்களை (ஆயர் மகளிரை) நோக்க வேண்டுதல் (22), கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நிமிர்ந்த, நெடுமால் (25), பாலன்ன வண்ணத்துப் பாஞ்ச சன்னியம். (2) - இவை யாவும் உவமையணிகள். யசோதை இளஞ்சிங்கம் (1), வெள்ளத்தரவில் துயிலமர்ந்தவித்து (6), அருங்கலம்ே (10), குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடி, புற்றரவல்குல் புனமயில் (11), கொம்பனார்க் கொழுந்து, குலவிளக்கு (17). கந்தம் கமழும் குழலி, பந்தார் விரலி (18), கப்பம் தவிர்க்கும் கலி (20), தோற்றமாய் நின்ற சுடர் (21), - இவை யாவும் உருவகங்கள். 3. கண்ணனைப் பற்றிய செய்திகள்: இவை அதிக மாகக் காணப் பெறுகின்றன. ஆயர்குலத்தில் தோன்றி யமை (5), சகடாசுரனை யழித்தமை (24), சானுர்ரன், முஷ்டிகன் என்ற மல்லரைக் கொன்றமை, கேசியைப் பிளந்தமை (8), கன்று குணிலாகக் கொண்டு விளவெறிந்: தமை, குன்றம் ஏந்தி குளிர் மழை காத்தமை (24)- முதலிய செய்திகள்ைக் காணலாம்.