பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

ஆழ்வார்களின் ஆரா அமுது


காட்சி-3: திருவேங்கடமலையில் கிளிறொன்று தன் பிடியுடன் கலந்திருக்கும்பொழுது ஊடல் நிகழ்கின்றது. உடனே அது தன் பேடையை விட்டுப் பிரிந்து இங்குமங்கும் திரிகின்றது. தன் சினத்திற்குப் போக்கு வீடாகத் தன் கொம்பினை மணிப் பாறைகளில் குத்துகின்றது. அப் பொழுது அதன் கொம்பினின்றும் முத்துகள் உதிர்கின்றன. புரிந்து மதவேழம் மாப்பிடியோ டிே திரிந்து சினத்தால் பொருது-விரிந்தசீர் வெண்கோட்டு முத்துதிர்க்கும் வேங்கடமே! மேலொருகாள் மண்கோட்டுக் கொண்டான் மலை." வேழம் . யானை; பிடி . பெண் யானை: கோடு. கொம்பு; மண் - பூமி(ப்பிராட்டி); என்பது ஆழ்வார் காட்டும் சொல்லோவியம். திருமலையி லுள்ள பளிங்குப் பாறைகளிலே யானை தன் நிழலைக் கண்டு எதிரி யானை என்று மயங்கி அதனோடு போர் செய்ததென்றும் கொள்ளலாம். காட்சி - 4: திருவேங்கட மலையின் உயர்ச்சியைக் காட்டும் போக்கில் மூங்கில்களின் வளர்ச்சியையும் காட்டு கின்றார் இந்த ஆழ்வார். திருமலையின் மூங்கில் மதி மண்டலத்தளவும் நீண்டு வளர்ந்துள்ளது. அது மதியைப் பற்றிக் கொண்டிருக்கும் இராகுவையும் தகர்த்துக் கிரகணத்தையே விடுவித்து விடுகின்றது. தீங்கழை போய் வென்று, விளங்குமதி கோள் விடுக்கும் வேங்கடமே!’83 என்பது ஆழ்வாரின் திருவாக்கு. இத்தகைய பல காட்சிகளை திவ்விய கவி பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் காட்டுவார். (அஷ்டப் பிரபந்தம் காண்க). 32. மூன். திருவந், 45 33. மூன். திருவந், 72. கோள் - கிரகணம்