பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254

ஆழ்வார்களின் ஆரா அமுது


இதில், "வஞ்சனை பொருந்திய யூதனையின் உடம்பு வரண்டு போகவும், நார் போன்ற நரம்புகள் கருகி உதிரும் படியாகவும், நஞ்சு தீற்றிய கள்ள முலையைச் சுவைத்துப் பார்த்தும் என் மீதுள்ள கிருபையினால் உயிருடன் வளரப் பெற்றாய்; கம்சனுடைய ஆயுளை அபகரித்த கருமுகிலே! தான் முலையை வீணாகச் சுமந்து கெட்டவரிலும் கடை கெட்டவளானேன்; உன்னையொழிய வேறொரு புகலற்று இராநின்றேன். என்றைக்காகிலும் உன்னைக் கண்ணால் காண்போம் என்று உயிரைப் பிடித்துக் கொண்டு வாழ் கின்றேன்; முலைப்பால் வேண்டும்போது என்னையும் விட்டு யசோதையையும் விட்டுப் பூ த ைன ைய ப் பற்றினாயே! இதுவோ தகுதி என்கின்றாள். (2) ஊடற் கோபங்கொண்ட கோபியர் கண்ண பிரானை வெறுத்துரைத்த அதுபவத்தை ஏறிட்டுக் கொண்டு ஆழ்வார் பேசுவதாக அமைந்தது ஆறாம் திரு மொழி. இதில் ஆழங்கால் படுவோம். ஒர் ஆய்ச்சியின் பேச்சு இது: "நீ யமுனையாற்றின் மணற் குன்றிலே நில்லு' என்று சொன்ன சொல்லை நம்பி நான் விடியுமளவும் அங்கே காத்திருந்து, நீ வரக் காணாமையால் வருத்தத்துடன் வீடு திரும்பினேன். அநியாயமாய் உன் பொய்யைக் கேட்டு மோசம் போனேன்” என்கின்றாள். கனவிலும் பொய் சொல்லியறியாத வசுதேவர்க்கு மகனாய்ப் பிறந்த நீயும் தந்தையை ஒத்திருப்பாய் என்று நம்பிக் கெட்டேன் காண்1 என்பது குறிப்பு. ஊடல் நிலையில் பேசும் பேச்சு இது (1). வேறோர் ஆய்ச்சியின் வார்த்தை இது : என் இல்லத்திற்குக் கீழ்பால் உள்ள இல்லத்தில் இருக்கும் பெண் பிள்ளையானவள் தனியே இருந்து தயிர் கடையும்போது அதனைக் கண்ட நீ கிடைத்தற்கரிய பொருளைப் பெற்றோம் என்று கருதி உடனே அவளருகில் ஓடிச் சென்று * அம்மா! நீ தனியாகத் தயிர் கடைந்தால் ஒருகாலும்