பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 என் ஆசிரியப்பிரான்

தகுதி வாய்ந்தவராக இருந்து இந்தக் கல்லூரிக்கு இத்துறையிலும் தொடர்ந்து நல்ல சிறப்பு இருந்து வரவேண்டும் என்பது என் ஆசை” என்று சொன்னர்.

உடனே முதல்வர், 'அப்படியானல் நீங்களே ஒரு தக்க புலவரைச் சொல்லுங்கள். அவரையே நியமனம் செய்கிருேம்’ என்று சொன்னர்.

அப்போது மயிலாப்பூர் பி. எஸ். உயர்நிலைப்பள்ளியில் தமிழ்ப் புலவராக இருந்தவரும், ஆசிரியப்பெருமானுச்கு ஆராய்ச்சியில் உதவி செய்தவருமாகிய இ. வை. அனந்தராமையர் என்பவரது பெயரை ஆசிரியப்பெருமான் தெரிவித்தார். உடனே தடை சொல் லாமல் அவரையே மாநிலக் கல்லூரித் தமிழ்ப்பண்டிதராக நியமித்து விட்டார் முதல்வர். அதுமுதல் பல காலம் அனந்தராமையர் அங்கிருந்து தொண்டாற்றினர். அவரே கலித் சொகையை ஐயரவர்கள் முறையைப் பின்பற்றி விரிவாக அக்சிட்டவர். ஒப்புமைப் பகுதிகள், பாடபேதம், அகராதி முதலிய அங்கங்களுடன் அப்பதிப்பு இருக்கிறது.

பி. எஸ். ஹைஸ்கூலிலிருந்து மாநிலக் கல்லூரிக்கு. இ. வை. அனந்தராமையர் வந்தவுடன் அவர் இருந்த இடத்திற்கு ஒரு தமிழ்ப் பண்டிதரை நியமிக்க வேண்டியிருந்தது. அந்த உயர்நிலைப் பள்ளியின் நிர்வாகக் குழுவில் செயலாளராக இருந்த எல். ஏ. கோவிந்தராகவ ஐயர் தக்க பண்டிதரை அப்பதவியில் நியமிக்க வேண்டுமென்று கருதி, யாரை நியமிக்கலாம் என்று ஆசிரியப்பெருமானிடம் யோசனை கேட்டார். ஆசிரியர் தம்மிடம் பாடம் கேட்டதுடன், தம் ஆராய்ச்சிக்கு மிகவும் உதவியாக இருந்த திரு ம. வே. துரைசாமி ஐயரை அப்பதவியில் நியமிக்கும்படி பரிந்துரை செய்தார். திரு துரைசாமி ஐயர் தமது கடைசிக் காலம் வரையில் அந்த உயர்நிலைப் பள்ளியில் தமிழ்ப் பண்டிதராக இருந்து விளங்கினர்.

இவ்வாறு தம்மோடு பழகினவர்கள், தம்மிடம் படித்த மாணவர்கள் ஆகியோருக்கு நல்ல பதவிகளை அமைத்துக் கொடுக்கும் ஆசிரியப்பிரானது பண்புக்குப் பல எடுத்துக்காட்டுக்கள் உண்டு.