பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குலசேகரப் பெருமாள் 251 பற்றி தெய்வ நங்கை’ எனச் சிறப்பிக்கப் பெற்றாள் என்பதை நினைந்து நினைந்து அதுபவிக்கவேண்டும். இந் நிலையில், குழல் இனிது யாழ்இனிது என்பர்தம் மக்கள் மழலைச்சொல் கேனா தவர்' என்ற வள்ளுவர் பெருமானின் வாய் மொழியையும் நினைந்து பார்க்கத் தோன்றுகின்றது. வெகுளியாய் நின்று உரைக்கும் அவ்வுரையும் என்ற தொடரே இவ்வாறு நினைக்க ஆற்றுப் படுத்துகின்றது. இன்னும் பேச்சு தொடர்கின்றது. குளிர்ந்த அழகிய தாமரை மலரையொத்த அழகிய திருக்கண்களையுடைய கண்ணபிரானே, நீ செம்மண்ணிலே புழுதியளைந்து வினை யாடும்போது தவழ்ந்து செல்வதனாலும், தட்டுத் தடுமாறித் தரையில் காலூன்றியும் ஊன்றாதும் நடப் பதனாலும், புழுதி மண்ணை அளைந்த அக்கோலத் தோடே வந்து என் மார்பில் கட்டிக் கொண்டு கிடக்கப் பெற்றிலேனே! வண்ணச் செஞ்சிறு விரல்களனைத்தாலும் அடிசிலை வாரி அமுது செய்யும்போது வாயது கையதாக மிகுந்த மிச்சலை (சேஷத்தை)யும் உண்ணப் பெற்றி லேனே! ஆட்டின் தாடையில் தொங்கும் முலை (அதர்} போலே என்னையும் என் தாய் வீணாக அன்றோ பெற்றாள்: (6) என்று இரங்கி வாய்வெருவுகின்றாள். இதனைக் கூறும்போது, மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம்' என்ற குறட்பா பகுதியையும், அமிழ்தினும் ஆற்றல் இனிதே தம்மக்கள் சிறுகை அளாவிய கூழ்”* 11. குறள்.06 (புதல்வரைப் பெறுதல்). 12. குறள்.65 13. டிெ.64