பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

ஆழ்வார்களின் ஆரா அமுது


முனிவர் தம்மை நெருங்கி வருவதைக் கண்டுகொண்ட பாணர், அடியேன் பாணன், பாணன்!” என்றார். முனிவரும் அடியேன் லோகசாரங்கன்! என்று பாணரின் திருவடிகளில் நெடுஞ்சானாக வீழ்ந்து அரங்கநாதனின் நியமனத்தை விண்ணப்பம் செய்தார். பாணர் அந்தக் கருணை மொழியைக் கேட்டு வியந்தார். ஆனால் அடியேன் அந்தத் திருக்கோயிலை மிதிக்கக் கூடுமா?’ என்று பின்வாங்கப் பார்த்தார். ஆயினும் முனிவர் அவரை விட வில்லை. தேவரீர் மிதிக்க வேண்டியதில்லை. அடியேன் தோளின் மீது ஏறிக் கொள்ளுங்கள். யான் சுமந்து கொண்டு செல்வேன்' என்று கூறி அவரைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டார். பாணரோ சொற்குழறி யாழை மீட்டிப் பாடியவண்ணம் தம்மை மறந்த நிலையில் இருந்தார். இப்போதுள்ள அம்மா மண்டபப் படித்துறையும் அங்கிருந்து திருக்கோயிலுக்குச் செல்லும் சாலையும் அன்றிருந்தனவோ? யாருக்குத் தெரியும்? துறையும் சோலை யுமாகவாவது இருந்திருக்க வேண்டும். அவர்கள் சோலை வழியாகச் செல்லும்போது செடிகளிலும் மரங்களிலும் பூத்துக் குலுங்கிய மலர்கள் வீழ்ந்தன. இது தேவர்கள் பூமாரி பொழிந்ததுபோல் தென்பட்டது முனிவருக்கு. முத்தனை ஆதிவாகிகர் எழுந்தருள்வித்துக் கொண்டு பரமபதத்தில் திருமாமணிமண்டபத்துக்குச் செல்லுமாறு போலச் சென்று அரங்கநாதனின் சந்நிதானத்தில் இறக்கி விட்டார். லோகசாரங்க முனிவரது திருத்தோளில் ஏறிக் கொண்டு அரங்கன் சந்நிதியை அடைந்த பாணருக்கு "முகிவாகனர் என்ற திருப்பெயரும் வழங்கலாயிற்று. முநிவாகனர் அணி அரங்கனது திவ்விய மங்கள விக்கிர கத்தை (திருமேனியை) அடிமுதல் முடிவரைக் கண்குளிரச் சேவித்தார். அத்திருமேனியில் ஆழங்கால்பட்டு அதன் அழகை அநுபவித்து அந்த அநுபவத்திற்குப் போக்குவீடாக