பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

ஆழ்வார்களின் ஆரா அமுது


கேள்வனது அநந்த கல்யாண குணங்களில் ஆழ்ந்த சிந்தை யுடையவராகின்றார். இ த ை ல் இம்மையின்பத்தை இகழ்ந்து திருமணத்தில் விருப்பமற்று மாணி வாழ்க் கையை மேற்கொள்ளுகின்றார். திவ்விய தேசங்களில் சென்று எம்பெருமானை மங்களா சாசனம் செய்யக் கருதுகின்றார். முதன் முதலாகத் திருவரங்கம் பெரிய கோயிலை வந்தடைகின்றார். அங்கு இரு காவிரிகளுக்கும் நடுவே அரவணைப் பள்ளியில் அறிதுயில் புரியும் அரங்க தகர் அப்பனைச் சேவிக்கின்றார். இத்திருக்காட்சி அவர் தம் உள்ளத்தில் ஆழப் பதிந்து விடுகின்றது. இது, குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் வீட்டி வடதிசை பின்பு காட்டித் தென்திசை இலங்கை நோக்கி கடல்நிறக் கடவுள் எங்தை அரவணைத் துயிலு மாகண்டு உடலெனக்கு) உருகு மாலோ! என்செய்வீர் உலகத் திரே!? என்று பின்னர் தாம் அருளிச் செய்த திருமாலையில் ஒரு பாசுரமாக அமைந்து விடுகின்றது. இப்பாசுரத்தில் பெரியபெருமாள் நான்கு திக்கு களுக்கும் தம் சம்பந்தம் உண்டாகும்படி அரவணைப் பள்ளி யனாய் அறிதுயில் செய்தருள்வதைச் சேவித்துத் தமது உடல் நீர்ப் பண்டமாய்க் கரைந்து உருகிச் செயலத் றிருத்தலை உலகத்தார்க்கு வியப்போடு அறிவிக்கின்றதைக் கண்டு மகிழ்கின்றோம். பூமியின் படைப்பு மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் வாழ்வதற்காக எ ன் று ம் ஆகாயத்தின் படைப்பு தேவர்கள் வாழ்வதற்காக என்றும் ஏற்பட்டிருக்கின்றது. திக்குகளின் படைப்பு வீண் என்து 3. திருமாலை. 19