பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

ஆழ்வார்களின் ஆரா அமுது


ஏழைமை ஆற்றவும் பட்டோம்; இனி என்னும் பொய்கைக்கு வாரோம்; தோழியும் கானும் தொழுதோம், துகிலைப் பணித்தரு ளாயே. (1) (குடைந்து.மூழ்கி, ஆழியன்-சூரியன்; அரவணை. பாம்புப் படுக்கை.! என்பது முதல் பாசுரம், ஆய்ச்சியர் குடைந்து நீராடுவான் போந்தோம் எனறு சொன்னதும், தமிழர்கள் கலவியைச் சுனையாடல்" என்று சொல்வது கண்ணனுக்கு நினைவு வருகின்றது. தான் அதை நினைத்து அங்ங்னே நீராடுகைக்கு தடை என்ன?’ என்கின்றான். அவனது உட். கருத்தை ஆய்ச்சியர் அறிகின்றனர். பிரானே! அந்த ஆசைக்கு இடமறும்படி பாழுஞ்சூரியன் வந்து தோன்றி விட்டானே! என்கின்றனர். செல்வன் ஆழியன்' என்றது :பாழுஞ்சூரியன்' என்றபடி. சுனையாடலுக்கு விரோதி யாக வந்து தோன்றினபடியால் அவன் ஆய்ச்சியரின் வசவுக்கு இடமானான் என்பது கருத்து. இங்ங்னம் பாசுரங் கட்கு நயம் உரைத்து மகிழலாம். கண்ணன் ஆடைகளையெல்லாம் அவர்கட்குத் தந்தருளு. கின்றான். இவர்களும் அவற்றைப் பெற்று புணர்ச்சிக்கும் இணங்குகின்றனர்; புணர்ச்சியும் நடைபெற்று விடுகின்றது. இந்தப் புணர்ச்சியும் பிரிவுடன் தலைக்கட்டுகின்றது. உடனே எப்போது மீண்டும் சந்தர்ப்பம் நிகழும் என்று: பார்த்தறியக் கூடல் இழைக்கின்றனர். கூடல் இழைத்தல் என்பது என்ன? வட்டமாகக் கோடு கீறி அதற்குள்ளே சுழி சுழியாகச் சுற்றும் சுழித்து இரண்டிரண்டு சுழியாகக் கூட்டிப் பார்க்கும்போது இரட்டைக் கணக்காக முடிவு பெற்றால் கூடுகை, ஒற்றைக் கணக்காக முடிவு பெற்றால் கூடாமை என்று உத்தியை நிலை நாட்டிக்கொண்டு ஏற்படுத்தும் ஒருமுறையே கூடலிழைத்தல் என்பது (இது கண்ணை மூடிக் கொண்டு செய்யப்படுவது). இது கூடல்