பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குலசேகரப் பெருமாள் 25% வாயிலாக அறிகின்றார். ஆத் திருக்கோயிலை நோக்கிப் புறப்பட்டுச் செல்ல முயலுகின்றார். அரசர் பெரிய பெருமாளைச் சேவிப்பாராயின் பின்பு திரும்புதல் அரிது என்று கருதுகின்றனர் அமைச்சர்கள். ஓர் உபாயத்தையும் சிந்திக்கின்றனர். பாகவதர்களை உபசரிப்பதில் மிக்க விருப்பமுன்ன "அலால் அதற்கு ஏற்பாடு செய்கின்றார். அறுபது னாயிரம் ஆண்டுக் காலம் திருமாலை ஆராதனம் செய்த பயன் ஒருகால் ரீவைணவர்களை ஆசித்த பேற்றுக்கு '-திாது என்ற உண்மையை அறிந்தவராதலால் அரங்க நகர்ப் பயணத்தை நிறுத்துகின்றார். திருமால் அடியார் களை உபசரிப்பதில் காலங்கழிக்கின்றார். இங்ங்ணம் திருத்தலப் பயணம் தொடங்கும் போதெல்லாம் இந்த உக்தியைக் கையாள்வதால், நாடெங்கும் அடியார்களின் கூட்டம் பெருகிவரலாயிற்று. அரண்மனையின் உள்ளும், ஆலோசனை மண்டபத்திலும் இன்னும் அந்தரங்கமான இடங்களிலும் அடியார்களின் திருக்கூட்டம் எக்காலத்திலும் சிறிதும் தடையின்றி உலாவத் தொடங்குதலையும் அரசனிடம் வரம்பு கடந்து சுதந்திரம் பாராட்டுதலையும் கண்ட அமைச்சர்கள் பொறாமை கொண்டு இவர்களிடம் அரசருக்கு வெறுப்பை உண்டாக்கக் கருதுகின்றனர். அதற்கேற்ற சந்தர்ப்பத்தை எதிர் நோக்கி இருக்கின்றனர். பூரீராம நவமி. இந்த மகோத்சவம் வருகின்றது. நகர் முழுவதும் தோரணங்கள், கொடிகள், வாழை மரங்கள் முதலியவற்றால் அணிசெய்யப் பெறுகின்றது. திருக் கோயிலின் அர்ச்சகர் இராமமூர்த்திக்கும் త్రొ డ్సభ ! எம்பெருமான்களின் திருமேனிகட்கும் திருமஞ்சனம் செய்தற் பொருட்டு அவர்களுடைய திவ்வியாபரணங் களைக் களைந்து வைக்கின்றனர். வேத ஒலியோடும் வாத்திய ஒவியோடும் திருமஞ்சனம் கோலாகலமாக நடை பெறுகின்றது. அனைவரும் சுவாமி சேவையில் கருத்தான்றித்