பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

ஆழ்வார்களின் ஆரா அமுது


கோல்தேடி ஒடும் கொழுந்ததே போன்றதே மால்தேடி ஓடும் இனம். என்ற நம்மாழ்வாரின் அநுபவம் இவளுக்கு ஏற்பட்டு ட்ெடது. புருடோத்தமனான வேணுகோபாலன்தான். தான் படரவேண்டிய கொள்கொம்பு என்பதை உணர்ந் தாள்; உறுதியும் கொண்டாள். ஒருநாள் கோதை கழுத்திலே காறை என்ற அணியைப் பூட்டிக் கொண்டாள்; கண்ணாடியில் தன் அந்த சேர்த்தியழகைப் பார்த்து மகிழ்ந்தாள். கைவளையல்களைக் குலுக்கிப் பார்த்துக் கொண்டாள். ஒர் அழகான நீலநிறப் புடவையை உடுத்திக் கொண்டாள். கோவைப்பழம் போன்ற தன் சிவந்த வாயை பும் கண்ணாடியில் பார்த்துத் திருத்திக் கொண்டாள். எப்படியோ தேறுதலடைந்தவளைப்போல் தன் காதலன் மணிவண்ணனின் பெயரைச் சொல்லிப் பிதற்றிக் கொண்டிருந்தாள். இப்படியெல்லாம் கலங்கித் தெளிந்து கொண்டிருந்த தன் அருமைச் செல்வியைப் பெரியாழ்வார் பார்த்து விட்டார்; திடுக்கிட்டுப் போனார். ஆனால் தன் திருத்தமப்பனார் இப்படிப் பார்த்தது இவளுக்குத் தெரியாது. இந்த அநுபவத்தைப் பெரியாழ்வாரே நற்றாய் நிலையில் இருந்து கொண்டு, காறை பூணும்; கண்ணாடி காணும்,தன் கையில் வளைகு லுக்கும்: கூறை உடுக்கும்; அயர்க்கும்;தன் கொவ்வைச்செவ் வாய்தி ருத்தும்; தேறித் தேறிகின்(று) ஆயிரம்பேர்த் தேவன் திறம்பி தற்றும்: 9. பெரி. திருவந். 27