பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டரடிப் பொடிகள் 23# அவனது ஊர் அரங்கம் என்னாது, அயர்ந்து வீழ்ந்தளிய மாந்தர் கவலையுள் படுகின்றார்; என்று அதனுக்கே கவல்கின் றேனே. * {நம்பி.பரிபூரணன்; அளிய-அருமந்த, அயர்த்துமறந்து வீழ்ந்து-விஷயாந்தரப் படுகுழியிலே வீழ்ந்து; கவலை-துக்கம்; கவல்தல்.கவலைப் படுதல்) என்ற பாசுரத்தால் அறியக்கிடக்கின்றது. (11) இவரது பாசுரங்களில் பச்சைமா மலைபோல் மேனி (2), வேதநூற் பிராயம் நூறு (3), வண்டினம் முரலும் சோலை (14), குட திசை முடியை வைத்து (19), ஊரிலே காணி இல்லை (29) போன்றவற்றை அன்பர்கள் அநுபவித்துப் பாடுவதுண்டு. வானொலியிலும் அடிக்கடி இவற்றைப் பாடக் கேட்கலாம். (12) இயற்கை எழில் எங்கு கொழிக்கின்றதோ அங்கு இறைவன் எழுந்தருளியிருப்பான் என்பது தத்துவம். சில பாசுரங்களில் ஆழ்வார் இந்த எழிலைப் போற்றியிருப் பதைக் காணலாம். வண்டினம் முரலும் சோலை (14) என்ற பாசுரத்தை மேலே காட்டினேன். இந்த எழில் திருப்பள்ளி எழுச்சிப் பாசுரங்களில் நன்கு அமைந்துள்ளன. அதிகாலையில் நிகழும் சூழ்நிலை இது: கிழக்குத் திக்கில் உதயகிரியின் கொடு முடியில் சூரியன் காணப்படுகின்றான். இரவு முழுவதும் பிரபஞ்சத்தைக் கவிழ்ந்திருந்த இருள் விலகுகின்றது; காலை நேரம் வருகின்றது. சிறந்த கலர்கள் மலர்ந்து தேன் வெள்ளமிருகின்றது (1). முல்லைச் செடி யில் உண்டான அழகிய மலர்களை அணைந்து கொண்டு கீழ்க்காற்று வீசுகின்றது. தாமரை மலரில் உறங்கும் அன்னப் பறவைகள் மழைபோல் சொரியும் பனியால் நனைந்த 33. திருமாலை - 12