பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குலசேகரப் பெருமாள் 24? கதையைக் கேட்டுக் கொண்டிருக்கும் யாவரும் இன்ன தென்று அறியாது திடுக்கிட்டு நிற்கின்றனர். கதை கூறும் புராண ஆசிரியர் நிலைமையை நன்கு உணர்கின்றார். :மெய்யறிஞர்களே, இராமன் ஒருவனே தனிமையில் நின்று போர் செய்து சேனைகளையெல்லாம் அழித்துக் கரதுTடனர்களையும் கொன்று தன் ஆசிரமத்திற்கு வந்து விடுகின்றான். சீதாப்பிராட்டி அவனைக் களிப்புடன் வர வேற்று ஆர்வத்துடன் தழுவி அவனது களைப்பைத் தணிவிக்கின்றாள்' என்று கூறி கதையை முடித்து விடுகின் றார். இதனைக் கேட்ட ஆழ்வார் பெருமகிழ்ச்சி அடை கின்றார். சேனையைத் திருப்பிக் கொண்டு தாமும் பயணத்தை நிறுத்திவிடுகின்றார். இதுமுதல் இராமனது வெற்றிச் சிறப்பு வரும் இடங்களில் அவற்றை விரிவாக வளர்த்தும், அரக்கர்களால் இராமனுக்குத் துன்பம் நேரும் இடங்களைச் சுருக்கி யுரைத்தும் கதையை நடத்தி வந்தனர். இப்படியிருக்க ஒரு நாள் அந்தப் புராணிகர் ஒரு முக்கிய செயலின் நிமித்தம் வேறிடம் செல்ல வேண்டி நேரிட்டது. அதனால் அவர் தாம் வராமல் தன் மகனை அனுப்பி வைத்தார். ஆழ்வாருக்கு இராமன் காட்சி தருதல்: குலசேகரப் பெருமான்னின் இயல்பை நன்கு உணராதவர் புராணிகளின் மைந்தர். இராவணன் சீதையை எடுத்துச் சென்ற செய்தி வரும் கட்டத்தைக் கேட்பவர்கள் நெஞ்சுருகும் வண்ணம் விரிவாக எடுத்துரைக்கலானார். இந்த நிகழ்ச்சியைக் கேட்டுக் கொண்டிருந்த சேரவேந்தர் மனம் கொதித்து எழுகின்றார். இப்பொழுதே அடியேன் வெகு விரைவாகச் சென்று கடல் கடந்து இலங்கையைச் சாம்பலாக்கி அரக்கர் கோனை உற்றார் உறவினருடன் தொலைத்துப் பிராட்டி யாகிய அன்னையை மீட்டு வருவேன்' என்று சொல்லி ஆயுதங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டும், சேனைகளை அணிவகுத்துக் கொண்டும் இலங்கையை நோக்கிப் பயண மானார். அப்போது விண்ணவரும் மண்ணவரும் இதைக் 16