பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குலசேகரப் பெருமாள் 265 நிற்க வேண்டும். “இத்தகைய பேறு என்றைக்கு வாய்க்குமோ?’ என்று அங்கலாய்க்கின்றார். (4-வது திருமொழி). பகவத் விஷயத்தோடு நின்று தரிக்கமாட்டாத ஆழ்வார் பாகவத விஷயத்திலும் தாம் பித்தேறிக் கிடக்கின்றமையை வெளியிடுகின்றார் இரண்டாம் திருமொழியில். பகவத் விஷயத்தில் மெய்யன்பு பூண்டவர்கள் பாகவத விஷயத்தில் ஈடுபாடு இல்லாமல் இருக்க முடியாது. பாகவத ஈடுபாடு இல்லையாயின் பகவத் விஷய ஈடுபாடு பலனைத் தாராது. குலசேகரப் பெருமாளுக்கு பகவத் விஷய ஈடுபாட்டைக் காட்டிலும் பாகவத விஷய ஈடுபாடு பள்ளமடையாக இருக்கும். ஆரம் கெடப் பரன் அன்பர் கொள்ளார் என்று: அவர்களுக்கே வாரங்ககொடு குடப்பாம்பிற் கையிட்வரிறே. * பாகவதர்களுடைய பெருமையை பூரீவசன பூஷணம்: வேதகப் பொன் போலே இவர்க ளோட்டை சம்பந்தம் என்று கூறும். ஈண்டு வேதகப் பொன்’ என்பது பலவித மான சித்த மருந்துகளை இட்டுப் பலகால் உருக்கிக் குளிகையாகப் பண்ணி, இரசவாதிகள் தங்கள் கைகளில் வைத்திருக்கும் பரிசவேதியான பொன். அதுபோலவே *இவர்களோட்டை சம்பந்தம் என்றது, அந்தப் பொன் தீண்டின அளவிலே இரும்பைப் பொன்னாக்குவது போலே , பிறவியிலே உண்டான நைச்யம் முதலானவற்றையுடைய விலட்சணரான இந்த பாகவதர்களுடைய சம்பந்தம், தாழ்ந்த பிறவியால் வந்த குற்றத்தைப் போக்கி 18. பூர்வசன பூஷ்ணம்-224. 19. பரிசவேதி-தன்னுடைய சம்பந்தத்தால் பேதிப்பது வேறுபடுத்துவது. பரிசம்-சம்பந்தம்; வேதி-பேதிப்பது, இரும்பின் கரிய நிறத்தைப் பொன்னிறமாக்குவது.