பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242

ஆழ்வார்களின் ஆரா அமுது


கண்டு வியப்புற்று இதன் முடிவு யாதாகுமோ? என்று பெருங்கவலை கொண்டு நின்றனர். ஆழ்வார் கடலை நீந்தியே கடக்க உறுதி கொண்டு கழுத்தளவினதான நீரில் நின்ற சமயத்தில், இவர்தம் அன்புக்கு இடமான இராமபிரான் இவரைத் தடுத்து நிறுத்துவதற்கு வகை யொன்றும் இல்லாமையைக் கருதி தாமே சீதாப்பிராட்டி யாருடனும் இலக்குமணனோடும் காட்சி தருகின்றான். தமது போர் வெற்றியையும் விரோதி நாசத்தையும் தேவியை மீட்டதையும் தெளிவாகக் கூறுகின்றான். பிறவிப் பெருங்கடலைக் கடந்து கரையேற்றுதற்கு ஓர் அறிகுறியாக இருக்குமாறு இவரைக் கரையேற்றி நகருக்கு அனுப்பிப் பின்னர் மறைந்தருளுகின்றான். இராமாவதார ஈடுபாடு: ஆழ்வார் இராமன் சரிதத்தில் தமக்குரிய ஈடுபாட்டை தசரதன் புலம்பல் (பதிகம்.9), தில்லைச்சித்திரகூடம் - இராமசரிதம் (திருமொழி.10, தாலாட்டு (9) என்ற மூன்று திருமொழிகளை அருளியதால் புலப்படுத்துகின்றார். அன்பர்களே. இவற்றில் ஆழங்கால் படுவோம். (1) தசரதச் சக்கரவர்த்தி இராமனைப் பிரிந்த அளவில் மனம் உருகி இரங்கிப் பேச்சுகளின் வடிவமாக அருளிச் செய்யப் பெற்றிருப்பது ஒன்பதாந்திருமொழி. ஆழ்வார் தம்மை தசரதனாகவே ஆக்கிக் கொண்டு புலம்புகின்றார். :இராமா, அயோத்தி மக்கள் அனைவரும் நின் திருவடி இணைகளில் வீழ்ந்து வணங்கி எழுந்து கை கூப்பி நின்று துதிக்க, நீ அரியணையில் அமர்ந்து முடி சூடுவதற்குச் சித்தமாக இருந்தாய். இந்நிலையில் “நீ கானாளப் போ' என்று கூறினாள் கைகேயி. அவளுடைய சொற்கேட்டு நான் மிக நன்றாக உன்னை நானிலத்தை ஆளும்படி செய்த அழகே அழகு!" என்று இரங்கிப் பேசுகின்றார் (1) நீயும் என்னுடைய கடுஞ்சொற்களைக் கேட்டுப் பரிவாரங் களையும் பரிசனங்களையும் துறந்து நெய்வாய வேல்