பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

ஆழ்வார்களின் ஆரா அமுது

திருக்குடந்தையில் தம் இறுதி நாட்களைக் கழிக்கத் தீர்மானித்துக் காஞ்சியை விட்டுப் புறப்பட்டுத் திருக் குடந்தையை நோக்கிச் செல்லும்போது பெரும்புலியூர் என்ற ஊரில் இளைப்பாறுகின்றார் ஒரு தெருத்திண்ணையில். அங்கேயிருந்து வேதம் ஒதிக் கொண்டிருந்த சில பார்ப்பனர்கள் இழிகுலத் ஜூசிய இவர் காதில் வேத. வாக்கியம் விழலாக்ாது வீேதக் ஒதுவதை நிறுத்தி விடு கின்றனர். இக்குறிப்பைபறிந்த ஆழ்வார் அவ்விடத்தை விட்டுத் தொலைவிலிருந்த வேறோர் வீட்டுத் திண்ணையில் வீற்றிருக்கின்றார். ஆனால் வேதம் ஒதுபவர்கட்கு பாகவத. அபசாரத்தினால் மறதி ஏற்படுகின்றது. உடனே ஆழ்வார் அவர்கள் விட்ட இடத்தைத் தொட்டுக் காட்டுகின்றார். அவர்கள் சாதி கருதி இந்தப் பெரியாரை அவமதித் தமைக்குப் பின்னர் வருந்தினார்களாம். இன்னோர் அதிசயமான குறிப்பு இவர் வாழ்க்கையில் காணப் பெறுகின்றனது. ஆழ்வார் அந்த ஊரில் எங்கெங்கே போயினும், அந்த ஊர்ப் பெருமாளும் சந்நிதிக்குள் இருந்தபடியே அந்தந்த திசைகளை நோக்கித் திரும்பிய வண்ணமாயிருந்தாராம். இந்த ஆச்சரியமான செய்தியை அர்ச்சகர் மூலமாக அறிந்த ஊர்ப் பெருமக்கள் அவ்வூரில் வேள்வி செய்து கொண்டிருந்த பார்ப்பன சமூகத்தினரிடம் ஒடித் திருமழிசையாருடைய சிறப்பை வெளியிடுகின்றனர். அப்படி ஒரு மெய்யடியாரைக் காணக் கூடுமாயின் அதுவே கண் படைத்த பயன்; இந்த வேள்வியின் பயனும் அது தான்!” என்று கருதிய வேள்வி தீட்சிதர் வெளியே போய் தேடிப் பார்த்து ஒரு தெருவில் நின்று கொண்டிருந்த ஆழ்வாரை வேள்விச் சாலைக்குள் இட்டுக் கொண்டு வந்து தலைமைப் பீடத்தில் வைத்துப் பூசிக்கின்றர்ர். இதைக் கண்ட வைதிகர்கள் வேள்வி கெட்டதென்று சினந்து, கேட்பார் செவி சுடும் சொற்களைச் சொல்லிப் பழிக்கின்றனர். ஆழ்வாரோ நீறுபூத்த நெருப்புப் போல இருக்கின்றார். தீட்சிதரோ பொறுக்க முடியாத கவலை