பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

ஆழ்வார்களின் ஆரா அமுது


ஆழ்வார்கள் மூவரும் எம்பெருமானைக் கண்டதும் பக்திப் பெருக்கில் திளைத்துப் போகின்றனர். பொய்கை யாழ்வார் தமது பாடலைத் தொடர்ந்து முதல் திருவந்தாதியை 100 பாசுரங்களாகப் பாடி முடிக்கின்றார்: பூதத்தாழ்வார் தமது பாடல் தொடங்கி இரண்டாம் திருவத்தாதியை நிறைவு செய்கின்றார்; பேயாழ்வார் சமூன்றாம் திருவந்தாதியைத் தலைக்கட்டுகின்றார் நூறு நூறு பாசுரங்களாக. இங்ங்னம் குருபரம்பரை' என்ற நூல் கூறுகின்றது. இந்த மூன்று திருவந்தாதிகளும் (முதல், இரண்டு, மூன்று) நாலாயிரப் பிரபந்தத்தில் இயற்பாப் பகுதில் முதலாவதாக இடம் பெற்றுள்ளன. அஞ்ஞான இருள் அகலப்பெறின் இறைவன் காட்சியளிப்பான் என்ற உண்மையை முதலாழ்வார்களின் வரலாற்றால் அறி கின்றோம். கீயும் திருமகளும் கின்றாயால் குன்றெடுத்துப் பாயும் பனிமறுத்த பண்பாளா - வாசல் கடைகழியா உள்புகாக் காமர்பூங் கோவல் இடைகழியே பற்றி இனி.

பாயும் . சொரிகின்ற; பாயும் பணி . மழை, காமர்பூ . விரும்பத்தக்க வாச ல் க ைட - திருவாயிலுக்கு வெளியே; உள்புகா.உள்ளே புகாமலும்; இடை கழி - நடுக்கட்டு; பற்றி - விரும்பி;

அத் துகையாழ்வாகின் பாசுரமும் இந்த நிகழ்த்துை அகசசான்றாக அமைந்து எடுத்துரைப்பதாக உள்ளது. .ே முதல். திருவந். 86.